சம்பவம் செய்தி

தமிழ்நாடு

500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில் கைது

Added : நவ 05, 2010 | கருத்துகள் (1)
Advertisement

திருநெல்வேலி : நெல்லையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கேரள மாநில தம்பதி கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த உஸ்மான் ராவுத்தர் மகன் அப்துல்ராபிக்(47). இவரது துணைவி அஸ்வதி(45). முதல் கணவரை பிரிந்த அஸ்வதி தற்போது அப்துல் ராபிக்குடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார். இருவரும்நெல்லை -தென்காசி ரோட்டில் அபிசேகபட்டியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். 4ம் தேதி இரவில் நெல்லை ஜங்ஷனில்  உள்ள பட்டாசு கடைகளில் அப்துல் ராபிக், 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியபடி இருந்தார். ஒரே கடையில் மீண்டும் மீண்டும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு மட்டும் பட்டாசு வாங்கியதால் சந்தேகமடைந்த கடைக்காரர் அவரை பிடிக்க முயற்சித்தபோது தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். போலீசார் அபிசேகபட்டியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது ஒரு ஸ்கேனர் கருவி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பயன்படுத்தி 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தது தெரியவந்தது.நோட்டின் நீர்எழுத்திலான காந்திபடத்தை மட்டும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் அச்சிட்டுள்ளார். முழுமையாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் 27ம், பகுதியாக அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டுக்கள் 78ம் பறிமுதல்செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களாக கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். சிறிய வீடாக இருந்தாலும் அனைத்து வீட்டுஉபயோக பொருட்களும் இருந்தன. காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய கணவன், துணைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amar - A,இந்தியா
05-நவ-201022:03:32 IST Report Abuse
amar Insha' Allah
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X