சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம்: புதுச்சேரியில் ஒரு பெண் கைது; குழந்தைகள் மீட்பு

Added : ஜூன் 03, 2010 | கருத்துகள் (1)
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலிடமிருந்து, மேலும் நான்கு குழந்தைகளை தனிப்படை போலீசார்  மீட்டனர். இது தொடர்பாக, புதுச்சேரி மனித உரிமை கழக தலைவியை கைது செய்தனர்.


கிருஷ்ணகிரியில் இருந்து, மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய  தனலட்சுமி (35) மற்றும் கடத்தலில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், பாதிரியார் செல்வம் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு குழந்தைகளையும் மீட்டு, பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி விற்பனை செய்த  இந்த கும்பல், மேலும் பல குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பிருக்கும் என போலீசார் சந்தேகமடைந்து, தனலட்சுமி, கிரிஜாவை,காவலில் எடுத்து விசாரித்தனர்


கிருஷ்ணகிரியிலிருந்து மேலும் மூன்று குழந்தைகளை கடத்தி, புதுச்சேரி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில், விற்பனை செய்ததாக கிரிஜா தெரிவித்தார். பண்ருட்டி பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார், கிரிஜா மூலம் விற்பனை செய்யப்பட்ட ஒன்றரை வயது உடைய இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் 40 நாள் ஆன ஒரு பெண் குழந்தையை மீட்டு, குழந்தைகளை வளர்த்து வந்த பெற்றோரை, விசாரணைக்காக கிருஷ்ணகிரி அழைத்து வந்துள்ளனர். கிரிஜாவிடம் போலீசார் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளதால், அவருக்கு மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கிரிஜாவிடம் நேற்று நடத்திய விசாரணையில்,  புதுச்சேரி முத்தையால் பேட்டையை சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழக  தலைவி லலிதா (34) என்பவரும் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில்  கடத்தப்பட்ட மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை, லலிதாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரிந்தது. அந்த குழந்தைகளையும் போலீசார் மீட்டு வந்துள்ளனர்.  இதுவரை ஐந்து ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் என மொத்தம் ஒன்பது குழந்தைகளை போலீசார் மீட்டனர். இதில், இரு குழந்தைகள் மட்டுமே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற ஏழு குழந்தைகளின் பெற்றோர் யார் என்று தெரியாத நிலையில், போலீசார் கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் மாயமான குழந்தைகளை பற்றிய கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-201023:23:27 IST Report Abuse
 அருள் மாணிக்கம் எ பி இத்தகைய சட்ட விரோத திருட்டு தொழிலில் ஈடுபடுவோரை பாதிரியார் என்று குறிப்பிட்டு உண்மையான மத போதகர்களுக்கு களங்கம் ஏற்படுத்தாதீர். இவங்கள் போலிகள். தங்களை தாங்களே பாதிரியார் என அழைத்துக் கொள்பவர்கள். இவங்களுக்கும் திருச்சபைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இத்தகையோர் எல்லா மதத்திலும் இருந்து கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X