அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிரந்த எழுத்துருக்களில் தமிழ்: ராஜாவுக்கு கருணாநிதி கடிதம்

Added : நவ 06, 2010 | கருத்துகள் (13)
Advertisement
கிரந்த எழுத்துருக்களில் தமிழ்: ராஜாவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை: கிரந்த எழுத்துக்களை யுனிகோட் வடிவத்தில் மாற்றுவதற்கான பரிந்துரையில் ஐந்து தமிழ் எழுத்துக்களும் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி, மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவருக்கு எழுதியுள்ள கடிதம்: இந்திய பாரம்பரிய எழுத்துக்களான சமஸ்கிருதம் மற்றும் கிரந்தத்தின் எழுத்துருக்களை உருவாக்க, யுனிகோட் கூட்டமைப்புக்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை பரிந்துரை செய்துள்ளதாக தமிழக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்தப் பரிந்துரை, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமுதாயத்திடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கு முன், தமிழறிஞர்களிடையே தேவையான அளவு கலந்தாலோசிக்கப்படவில்லை என, அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, கிரந்த எழுத்துருக்களில் ஐந்து தமிழ் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இதன் எதிரொலியாக, தமிழக நிதியமைச்சர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் மூத்த அமைச்சர்கள்,  முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் தலைவர் அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து,  கனிமொழி எம்.பி., சிங்கப்பூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர் அரவிந்தன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை, கடந்த 4ம் தேதி நடத்தினேன். இந்தக் கூட்டத்தில், "அந்தப் பரிந்துரையை இறுதி செய்வதற்குமுன் பரந்துபட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும்' என, ஒருமித்தகருத்து எழுந்தது. இதுதொடர்பான ஆலோசனை நடத்தி, பரிந்துரையை அளிக்க தமிழக அரசு, ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்க உள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரை யுனிகோட் கூட்டமைப்புக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த பரிந்துரையின் மீது முடிவெடுப்பதை ஒத்திவைக்கும்படி கூட்டமைக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பான முன்னேற்றங்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். 


Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
07-நவ-201023:36:21 IST Report Abuse
இராஜா சேகவி.... தகவல் தொழில்நுட்ப கலைஞர் அரவிந்தனை தெரியாதா உங்களுக்கு? அய்யா உங்களுக்கு துணைவியார் உண்டா? உங்கள் துணைவியாருக்கு மகள் உண்டா? உங்கள் மகளுக்கு கணவர் உண்டா? கூட்டி கழிச்சி பாருங்க, எல்லாம் சரியா வரும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக் - மோர்கன்ஹில்,யூ.எஸ்.ஏ
07-நவ-201020:49:11 IST Report Abuse
அசோக் பேசுவதெல்லாம் சாபக்கேடு,பெயரிலெல்லாம் நிதி. கிரந்த எழுத்து மட்டும் கண்ணை உருத்துதாக்கும்.. இவர் குறிப்பிட்ட தமிழ் அறிஞர்களைப் பாருங்கள். எவரேனும் பெயர் சொல்லக்கூடிய அளவில் உண்டா. குடும்ப ஒட்டுண்ணிகளும், கொடி தூக்கி அடிவருடிகளும்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
07-நவ-201020:36:49 IST Report Abuse
adalarasan எதாவது ஒரு விதத்தில் இவர்தான்! தமிழ்மொழியை காப்பவர்போல் , விளம்பரம் செய்யவே இந்த நடவடிக்கை! திரு ராசா அவர்கள் எப்போழ்தும் இவர் நாற்காலி, பின்னாலேய இருக்கிறார்![பத்திரிக்கை, போட்டோக்கள்]!ஆகையால், கடிதத்தை கையில் கொடுத்திருப்பார்! நன்றி !!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X