கோவில் குருக்கள் உட்பட நான்கு பேர் சிக்கினர் : சங்கு மோசடியில் ஈடுபட முயன்றனர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் குருக்கள் உட்பட நான்கு பேர் சிக்கினர் : சங்கு மோசடியில் ஈடுபட முயன்றனர்

Added : ஜூன் 04, 2010
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சங்கு மோசடியில் ஈடுபட சங்கு உரிமையாளரை வற் புறுத்திய கோவில் குருக்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த தூசி மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(42). இவரிடம் ஐந்து கிலோ எடை கொண்ட மிகப் பெரிய வலம்புரி சங்கு உள்ளது. அவரது தந்தை வாங்கியது.இச்சங்கை கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் பூஜைக்கு பயன் படுத்தி வருகிறார். வெளியூர்களில் நடக்கு கோவில் கும்பாபிஷேகம், யாகங்கள் போன்றவற்றுக்கு பயன் படுத்த யாரேனும் சங்கு கேட்டால் கொடுப்பார்.இச்சங்கை வில்லிவாக் கத்தைச் சேர்ந்த ஜாகீர்கான் (37) என்பவர் பார்த்தார்.

இந்த சங்கை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்ட எண்ணினார். இவர் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புரு÷ஷாத்தமன்(40) பெரியகாஞ்சிபுரம் மளிகைத் தெருவைச் சேர்ந்த இன்பநாதன்(45) பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவில் குருக்கள் சுந்தரம்(42) ஆகியோர் பழக்கமாகினர்.அவர்களிடம் ஜாகீர்கான் சங்கு விவரத்தை தெரிவித்தார். தூத்துக்குடியில் புரோக்கர்கள் உள்ளனர். அந்த சங்கை வாங்கினால் 50 லட்சம் ரூபாய்க்கு விற் பனை செய்யலாம் என் றனர்.தொடர்ந்து அனைவரும் மோகனை சந்தித்து பேசினர். ஆனால், அவர் சங்கு விற்பதற்கில்லை என்று கூறிவிட்டார்.தங்கள் ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேகத் திற்கு சங்கு வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு சங்கு தருவதாக மோகன் உறுதி அளித்தார்.

நேற்று காலை நான்கு பேரும் காஞ்சிபுரம் வந் தனர். பின் மோகனுக்கு போன் செய்து, "காமாட்சியம்மன் கோவிலில் உள் ளோம். சங்கை கொண்டு வாருங்கள்' என்றனர். அதை ஏற்று, மோகன், சங்குடன் காஞ்சிபுரம் வந்தார்.நான்கு பேரும், அவரிடம் தற்போது ஒருவர் வருவார். அவர் சங்கு விற் கிறீர்களா எனக் கேட்பார். ஆமாம் எனக் கூறுங்கள் என்றனர்.அதைக் கேட்டு மோகன் அதிர்ச்சி அடைந்தார். சங்கை காண்பித்து யாரையோ ஏமாற்ற முயற்சிக் கின்றனர் என்பதை உணர்ந் தார்.உடனடியாக சிவகாஞ்சி போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவவேளியப்பன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சங்கு மோசடியில் ஈடுபட முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X