சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆண்மை சோதனை

Added : நவ 10, 2010
Advertisement
கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆண்மை சோதனை

திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியார் ராஜரத்தினத்துக்கு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.


திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் அவருக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்த மூன்று பாதிரியார் மீது, ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ்மேரி (31), கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நீக்கியது. புகாரின்படி, "போலீசார் கைது செய்து விடுவரோ' என பயந்த பாதிரியார் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், "கோட்டை மகளிர் போலீசில் ஆஜராகி, போலீசாரின் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தபின், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்' என, தீர்ப்பளித்தனர்.கடந்த 8ம் தேதி, கோட்டை மகளிர் போலீசில் ஆஜரான பாதிரியார் ராஜரத்தினத்தை நேற்று முன்தினம் மாலை, போலீசார் திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


"போலீசாருடன் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்; தினம் காலையும், மாலையும் கோட்டை மகளிர் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையுடன், நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் முன்ஜாமீன் வழங்கினார்.அதன்படி, நேற்று காலை 7.30 மணிக்கு, பாதிரியார் ராஜரத்தினத்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் ரவிக்குமார் மற்றும் குழுவினர், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர். பிறகு கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாதிரியார், கையெழுத்திட்டபின் புறப்பட்டுச் சென்றார்.


பாதிரியாருக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கையில், "பாதிரியார் ஆண்மை அல்லாதவர் என்று கூறமுடியாது' என, டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முன்ஜாமீன் பெற்ற பாதிரியார் ராஜரத்தினம், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிரியார், தன் பாஸ்போர்ட்டை, வக்கீல் மூலம் ஒப்படைத்தார். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X