இந்தியா

ரூ.1,651 கோடிக்கு ரயில்வே நிலம் விற்பனை

Added : நவ 12, 2010
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் ரயில்வேக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம், 1,651 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்துக்கு, நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ளது. டில்லியில் சராய் ரோஹிலா ரயில் நிலையத்துக்கு அருகே, ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான, 38 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம், சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. 19 ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் இந்த நிலத்துக்கு ஏலம் கோரியிருந்தனர். இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம், 1,257 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை கோரியது. ஆனால், அதை விட பர்ஸ்வ்நாத் நிறுவனம், 1,651 கோடி ரூபாய்க்கு அதிகபட்சமாக இந்த நிலத்தை ஏலம் கோரியது. எனவே, இந்த நிறுவனத்துக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரயில்வே தரப்பில் யார் இந்த நிலத்தை ஏலம் எடுத்தார்கள் என குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பர்ஸ்வ்நாத் நிறுவன தலைவர் பிரதீப் ஜெயின், தங்கள் நிறுவனம் தான் இந்த நிலத்தை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X