இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : "க்ளூ கிடைப்பதில் பின்னடைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : "க்ளூ' கிடைப்பதில் பின்னடைவு

Added : நவ 12, 2010
Share
ராமநாதபுரம் : குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,கள் குவிந்துள்ளதால், "க்ளூ' கிடைப்பதில் பின்னடைவு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், குப்பான்வலசையை சேர்ந்த முத்துச்சாமி, சாத்தான்குளம் ஆதிலாபானு(24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துச்சாமி மாதம் மாறிய நிலையில், இவர்களுக்கு முகமது அஸ்லம்(7), அஜிராபானு(5) என்ற குழந்தைகள்

ராமநாதபுரம் : குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,கள் குவிந்துள்ளதால், "க்ளூ' கிடைப்பதில் பின்னடைவு உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம், குப்பான்வலசையை சேர்ந்த முத்துச்சாமி, சாத்தான்குளம் ஆதிலாபானு(24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துச்சாமி மாதம் மாறிய நிலையில், இவர்களுக்கு முகமது அஸ்லம்(7), அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக முத்துச்சாமி, மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், தம்பதியினரிடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ஆதிலாபானு, ராமநாதபுரம் பாரதிநகரில் குடியேறினார். கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான பானு, மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. "இந்த கொலை சம்பவத்தில் கள்ளக்காதலர்கள் இடையேயான மோதல் ஏற்பட்டிருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.


இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் "இன் பாக்ஸ்' நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய "க்ளூ' கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X