சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்?

Added : நவ 13, 2010
Advertisement
கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்?

ராமநாதபுரம்: மதுரை வாடிபட்டி அருகே, குழந்தைகளுடன் கொலையான ராமநாதபுரம் பெண் ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருடன் திருச்சி, மதுரை நபர்கள் மொபைலில் பேசியதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஆதிலா பானு(24). இவர் குழந்தைகளுடன் கடந்த நவ., 8ல் மதுரை வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்கள் கணேசன் (கேணிக்கரை), லெட்சுமணன் (வாடிபட்டி), மதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஆதிலா பானு வீட்டில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டபோது, ஆதிலா பானு பயன்படுத்திய மேலும் ஒரு மொபைல் போன் கிடைத்துள்ளது.


விசாரணையில், "ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார். இதுபோல் திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் அடிக்கடி போனில் பேசியுள்ளதும்' தெரிய வந்துள்ளது. மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அதில், ராமநாதபுரத்தில் உள்ள பல முக்கிய நபர்களின் எண்களும் உள்ளன. ஆதிலா பானுவுக்கு, வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா, கள்ளத் தொடர்பால் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளங்கள் இல்லாத வகையில் கொலை நடந்துள்ளதால், கூலிப் படையினர் மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X