கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி பிழைக்குமா?

Updated : நவ 20, 2010 | Added : நவ 19, 2010 | கருத்துகள் (12)
Share
Advertisement

பெங்களூரு : நில மோசடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருவதால், கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக எடியூரப்பாவின் மகனும், மகளும் முடிவு செய்துள்ளனர்.


கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை, தன் மகன் ராகவேந்திரா, மகள் உமாதேவி மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அந்த கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரில் கூடிய கர்நாடக அமைச்சரவை, கடந்த பத்தாண்டுகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நிலம் குறித்து, விசாரணை நடத்தப்படும் என, உத்தரவிட்டது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. "முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தின.


இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக பா.ஜ., தலைவர் அத்வானி வீட்டில், அக்கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில், இதுகுறித்து விளக்கம் அளிக்க, டில்லி வரும்படி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, அவர் டில்லி புறப்பட்டுச் சென்று, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


திரும்ப ஒப்படைப்பு? இதற்கிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப அரசிடம் ஒப்படைப்பதாக எடியூரப்பாவின் மகனும், மகளும் நேற்று அறிவித்தனர். எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாக, எடியூரப்பாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், எடியூரப்பாவின் மகள் உமாதேவி, ஹரோகாலியில் தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தை, கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரியத்திடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிறுத்தி, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், எடியூரப்பா நில விவகாரம் இதற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியின் வெற்றிக்கு, எடியூரப்பா விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கட்சி மேலிடம் கருதுகிறது. இதனால், எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கலாமா என்றும் கட்சித் தலைவர்களில் ஒரு தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் முன்னிலை வகிக்கிறார். எடியூரப்பாவுக்கு ஆதரவான மற்றொரு தரப்பினர், "உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது சரியான நடவடிக்கையாக இருக்காது' என்று கூறி வருகின்றனர். எனவே, எடியூரப்பாவின் முதல்வர் பதவி பிழைக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம், எடியூரப்பா நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக கர்நாடகாவில் ஊழலை விசாரிக்கும் அமைப்பான "லோக் ஆயுக்தா' எடுத்து விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், இம்மாதிரி நில ஒதுக்கீடுகள் அவ்வப்போது பல்வேறு மாநில அரசுகளும் மேற்கொள்ளும் நடைமுறை என்றும் கூறப்படுகிறது.


கர்நாடக முதல்வராக கடந்த 2008ல் எடியூரப்பா பதவியேற்றார். கடந்தாண்டு, கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பாவை நீக்கக் கோரி, போர்க்கொடி தூக்கினர். கட்சி மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததால், அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. கடந்த மாதம், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால், எடியூரப்பாவின் பதவி மீண்டும் பிழைத்தது. தற்போது மூன்றாவது முறையாக எடியூரப்பாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAMUNDIAMMA - COIMBATORE,இந்தியா
20-நவ-201023:19:24 IST Report Abuse
SAMUNDIAMMA PLEASE DONT RESIGN!TRY TO EARN MORE AND MORE!
Rate this:
Cancel
rthina - chennai,இந்தியா
20-நவ-201015:50:27 IST Report Abuse
rthina pls take advice from Corruption King "Karunanidhi".he will give you multiple ways to escape from the Corruption..
Rate this:
Cancel
SIVAKUMAR K - bangalore,இந்தியா
20-நவ-201015:16:18 IST Report Abuse
SIVAKUMAR  K yediyurappa nalla manidhar avar uyal seyyamattar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X