அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கட்சியினர் பாடுபட வேண்டும்: இளங்கோவன்

Updated : நவ 23, 2010 | Added : நவ 21, 2010 | கருத்துகள் (160)
Advertisement

கவுந்தப்பாடி  : ""தமிழகத்தில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்,'' என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்தகைய ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.தமிழகத்தின் நிலைமை தற்போது மிகமோசமாக உள்ளது. வரும் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சியை பிடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர்.


நீயும் இதையே செய்; ஜால்றா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதை நினைத்துப் பார்க்கும் போது பயமாக உள்ளது. இந்த தொகைக்கு எத்தனை, "சைபர்' என்று கூட பலருக்கு தெரியாது. சத்துணவுடன் இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் அன்றைய காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.இவ்வாறு இளங்கோவன் பேசினார். 


Advertisement




வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
27-நவ-201013:31:24 IST Report Abuse
Kannan பீகார் நிலைமை தான் ஏற்படும் என்பதை இந்த அரசியல் கோமாளி உணரவில்லை. பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சொல்கிறார். "பிரதமர் பதவிக்கு வர விரும்பும் ராகுல், அதற்கு முன்னர் முதல்வராக வேண்டும். அப்போது தான் நிர்வாகம் குறித்து அவருக்கு தெரியும்" அதைப்போல இளங்கோவன் போன்றோர், சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
26-நவ-201016:10:12 IST Report Abuse
manoharan அண்ணா, அப்ப அப்ப நீங்க சேம் சைடு கோல் போடிறீங்க. சோனியாவையும் ராகுலையும் வீட்டுக்கு அனுப்ப பாக்கிறீங்களே. இதனாலேதான் நீங்க வளர மாட்டேங்குறீங்க.
Rate this:
Share this comment
Cancel
சுரேஷ் - புளியங்குடி,இந்தியா
26-நவ-201013:27:14 IST Report Abuse
சுரேஷ் வணக்கம். எல்லோரும் ஒன்னு தெரிஞ்சுகோங்க.யாரு ஆளும் கட்சியா இருந்தாலும் குறை இருந்தா thenavatta முதலிலேயே பதில் சொல்வது இவர்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.அதுதான் நம் போன்ற பொதுமக்களுக்கு தேவை.இளங்கோவன் என்ன பேசுறார் என்பதை விட எப்படி பேசுறார் என்பதை பாருங்க. பயமே இல்லாமே ஆளும் கட்சின்னு கூட பார்க்காம தில்லா பதில் சொல்றார். கிரேட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X