அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்பெக்ட்ரம் விசாரணை அதிகாரி மாற்றத்துக்கு காரணம் யார்? கருணாநிதி

Updated : நவ 23, 2010 | Added : நவ 22, 2010 | கருத்துகள் (120)
Advertisement

சென்னை : "ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி மாற்றப்பட்டதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்ல தயாரா?' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.


அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை:ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.


உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் கூட அல்ல; விஷத்தைக் கொண்டிருப்பவர் யார் என்பதை, மத்திய அரசு நன்றாக புரிந்து கொண்டு தான், தொடர்ந்து அவருடைய அறிக்கைகளுக்கெல்லாம் முகத்திலே அறைவதைப் போல, பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது."பதிபக்தி இல்லாதவர் சோனியா' என்றும், "வெளிநாட்டுக்காரி சோனியா' என்றும் பேசிவிட்டு, இப்போது, "நிபந்தனையற்ற ஆதரவுக்கு தயார்' என அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்குத் தான், உதட்டில் வெல்லம்; உள்ளத்தில் கள்ளம். இது, மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, "ஒரு பிரதமர் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போவாரா' என கேள்வி எழுப்பியவரும்; நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, "மத்திய அரசு செயல்படாத அரசாக இருக்கிறது' எனக் கூறியவரும்; வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, "அவர் நடுநிலை தவறி நடப்பவர்; தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்' என விமர்சித்தவரும் ஜெயலலிதா தான்.


ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. இதற்கு மேலும் உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்லத் தயாரா?மத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில், ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, "அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்' என்றும், அவர்களுக்குப் பதிலாக, தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டும் என்றும் கோரியதை மறந்துவிட்டாரா? அவற்றை ஏற்க வாஜ்பாய் அரசு முன்வராத காரணத்தால், மத்திய அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.


ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் தவறு நடந்திருக்கிறது என்றால், "தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை பார்லிமென்டில் வைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என பிரதமரும், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி போன்றவர்களும் மீண்டும் மீண்டும் உறுதியளித்த பிறகும், அதற்கு முன்வர பா.ஜ.,வும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்?முறைப்படி லோக்சபாவில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்கு குழுவின் முன் கொண்டு போகப்பட்டு, அந்தக் குழுவிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தானே. தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், முன்பெல்லாம் பொதுக் கணக்கு குழுவின் முன் தான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்?இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathankulam - thuthukudi,இந்தியா
24-நவ-201000:14:09 IST Report Abuse
 sathankulam இந்தியமக்களே: புரிந்து கொள்ளுங்கள்.காமராசர் தன் குடும்பத்தை சிறிதும் நினைக்காமல் நாட்டுக்காகவும்,கட்சிக்காகவும் உழைத்து மறைந்த அந்த தலைவர்கள் எங்கே, நாட்டை வளைத்து, பணம் கொழிக்கும் எல்லா துறைகளையும் தன் குடும்பத்தினருக்கே பறித்து வாங்கி, வரலாறு காணாத பணமும் அதிகாரமும் குடும்பத்துக்கு சேர்த்து வைத்த{மஞ்ச துண்டு} எங்கே? ஜாதிகளே வேண்டாம் என்ற பெரியார், அண்ணா எங்கே, இமாலய ஊழல் புரிந்து நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தியவனை, ஜாதியின் பெயரால் காப்பற்ற முற்படும் இவர் எங்கே? தீவிரவாதிகளுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் இன, ஜாதி பெயரால் வக்காலத்து வாங்கும் நீங்களா பெரியார் அண்ணா கோட்பாடு பற்றி நடப்பவர்?இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலால் Rs 1 .76 லட்ச கோடி என்றாலே.........சுவிஸ் வங்கியில் கருப்பு பணம்எவ்வளவு............................அதன் மதிப்பு எவ்வளவு முக திரையை கிழியுங்கள்.... இப்படிக்கு இந்தியன் ஆவலுடன்
Rate this:
Share this comment
Cancel
இனியவன் - வேதாரண்யம்,இந்தியா
24-நவ-201000:06:49 IST Report Abuse
இனியவன் முதலில் தினப்படியாக ரூபாய் இரண்டாயிரம் நாளொன்றுக்கு வாங்கிக்கொண்டு பராளுமன்றத்தில் அடாவடித்தனம் செய்யும் எம்.பிக்களின் தினப்படியை நிறுத்தவேண்டும். வீணாக மக்கள் பணத்தில் வயிறு வளர்ததுக்கொண்டு மக்கள் பணத்தை விரயம் செய்யும் எம் பிக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து தங்கள் போராட்டத்தை நடத்தலாம்.அதனால் மக்கள் பணம் வீணாகாது.
Rate this:
Share this comment
Cancel
KADAYANALLUR SHAHUL HAMEED - London,யுனைடெட் கிங்டம்
23-நவ-201023:47:52 IST Report Abuse
KADAYANALLUR SHAHUL HAMEED BOTH GUYS KEEP ON ACCUSING EACH OTHER, THUS REVEALING ALL STUPIDITY DONE BY THEMSELVES. STILL SOME IDIOTS AROUND TO VOTE THEM.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X