தமிழ்நாடு

இந்தியாவுக்கே வழிகாட்டும் கோட்டூர்; தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் சாதனை

Added : ஆக 18, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
நிலக்கோட்டை : மத்திய அரசின் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக கோட்டூர் விளங்குவதாக பிற மாநில கலெக்டர்கள் பாராட்டியுள்ளனர். மத்திய அரசு சார்பில் வறண்ட பகுதிகளில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. நிலக்கோட்டை ஒன்றியத்தில் 10 நீர் வடிப்பகுதிகள் கோட்டூர்,

நிலக்கோட்டை : மத்திய அரசின் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக கோட்டூர் விளங்குவதாக பிற மாநில கலெக்டர்கள் பாராட்டியுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் வறண்ட பகுதிகளில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. நிலக்கோட்டை ஒன்றியத்தில் 10 நீர் வடிப்பகுதிகள் கோட்டூர், கோடாங்கிநாயக்கன்பட்டி, நரியூத்து, சிலுக்குவார்பட்டி, மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிகளில் செயல்பட்டு வருகின்றன. இதில் கோட்டூர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளன.தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் குறைந்த செலவில் அதிக பயன்பாடு என்பது இலக்கு. இவ்வூராட்சியில் 40க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், ஆயிரம் இடங்களில் வாய்க்கால் கரைகளை வலுப்படுத்தி சமப்படுத்துதல், ஓடைகளில் கம்பி வளையுடன் கூடிய கல் வரப்பு அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இப்பணிகளில் கிராம மக்களே தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட கலெக்டரும், இத்திட்ட இயக்குனருமான ஹரிகரன் போட்டோக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
போட்டோக்களை பார்வையிட்ட மத்திய அரசு இத்திட்டத்தை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களில் செயல்படுத்த 7 மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அனுப்பி பார்வையிடச் செய்தது. இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் இத்திட்டம் குறித்து ஊராட்சி தலைவர் ஜெயராஜ் கூறுகையில்,"" எங்கள் ஊராட்சியில் கண்மாய்கள் இல்லை.

ஓடைகள் மட்டுமே உள்ளதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியவில்லை. மத்திய அரசின் இத்திட்டம் எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் விவசாயிகளும் இத்திட்டத்தின் நோக்கம் அறிந்து ஆர்வமாக ஒத்துழைப்பு கொடுத்தனர். தரிசு நில மேம்பாட்டு திட்டம் மூலம் நிலத்தடி நீர் சிறிது உயர்ந்துள்ளது. ஊராட்சியை வளமாக்க மேலும் 100 தடுப்பணைகள் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
19-ஆக-201502:47:02 IST Report Abuse
Loganathan கிராம மக்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X