குற்றம் சாட்டப்பட்ட தாமசுக்கு பதவி தந்தது தவறு: சொரப்ஜி

Added : நவ 23, 2010 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : ""ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாமசை, ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை ஆணையராக நியமித்தது தவறு,'' என, முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொரப்ஜி கூறியுள்ளார்.


மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து பொது நல அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணக்கு வந்த போது, "கேரளாவில் நடந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தாமஸ். அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுத்து விட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். இப்படி, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கலாமா' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.


இது தொடர்பான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொரப்ஜி கூறுகையில், "ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சர்ச்சைக்குள்ளான தாமசை, மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையராக நியமித்தது தவறு. இம்மாதிரி பதவிக்கு எவ்வித புகாரும் இல்லாத ஒருவர் தான் தேவை. வெறும் குற்றப்புகார் மட்டும் முதலில் சுமத்தப்பட்டவர் என்ற வாதம் சரியல்ல. அப்புறம் எப்படி ஊழல் கண்காணிப்பு தலைமையகத்தில் மக்கள் நம்பிக்கை கொள்வர்?' என்றார். மேலும் தகவல் தொடர்பு துறையில் முக்கியப் பதவி வகித்தவர் தாமஸ் என்பதால், இவருக்கு அரசு அளித்த பதவி அதிக சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BSP - Mumbai,இந்தியா
24-நவ-201003:48:51 IST Report Abuse
BSP He is having very important qualification, i.e. he is Soniaji religion.So all his sins will be forgiven!!!!!!!!!!!!! He may even the C.M. of Kerala one day ,if removed from this post !!!!!!!!!!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X