அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: முதல்வர் அதிரடி

Updated : நவ 24, 2010 | Added : நவ 24, 2010 | கருத்துகள் (122)
Share
Advertisement
சென்னை : ""முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னையில் நேற்று நடந்த வேளாண் அலுவலர்கள் மாநாட்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தென்னகப் பகுதி, தமிழக பகுதி, வடக்கே உள்ள பகுதி

சென்னை : ""முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.


சென்னையில் நேற்று நடந்த வேளாண் அலுவலர்கள் மாநாட்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தென்னகப் பகுதி, தமிழக பகுதி, வடக்கே உள்ள பகுதி ஆகியவை கலந்த ஏக இந்தியாவில் நாம் இருக்கிறோம். நாட்டின் ஒரு பகுதியில் இருப்பவரை வளர்த்து விட்டுவிட்டு, ஒரு பகுதியில் இருப்பவரை தாழ்த்தினால், அது ஏக இந்தியாவாக இருக்க முடியாது. மாநிலம், மத்திய அரசு என்பது என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. இது பேதங்கள், பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனையாளர்கள் மறந்து விடக்கூடாது. தமிழக வேளாண்துறை வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது; மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று ஒரு தாய் உரிமை கொண்டாட முடியாது; தகப்பனுக்கும் உரிமை உண்டு.


ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி இரு பெண்கள் சாலமன் என்ற மன்னனிடம் வந்தனர். யார் உண்மையான தாய் என்று விசாரித்து, அந்த மன்னன் தீர்ப்பளித்த பின்பும், அதை இருவரும் ஏற்கவில்லை. கடைசியாக, தனது வாளை எடுத்து குழந்தையை இரு துண்டாக்கி, ஆளுக்கு ஒரு பங்கு தருவதாக கூறினான். இருபெண்களில் ஒருவராக இருந்த போலித்தாய் சதி செய்ய நினைத்தாள்; ஒப்புக்கொண்டாள். அந்த குழந்தையை பெற்ற தாயோ, "என் குழந்தையாக இருந்தாலும், அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்றாள். அவளைப் பொறுத்தவரை குழந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அந்த எண்ணம்தான் நமக்கும் இருக்கிறது. மற்ற முதல்வர்கள் சொல்வது போல், மத்திய அரசு என்று நான் சொல்லவில்லை; இந்தியப் பேரரசு என்று சொல்கிறேன்; நாங்கள் சிற்றரசுதான்.


நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.


ராஜாவை நீக்க வேண்டும் தி.மு.க.,வுக்கு யுவராஜா கோரிக்கை: இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனை விதித்து பேசினார். அவர் பேசியதாவது: தற்போது ஆட்சி செய்யும் தி.மு.க., அரசை நான் குறை கூற விரும்பவில்லை. தி.மு.க.,வினர் கிராமத்திற்கு செல்கின்றனர். இலவச "டிவி' களை வழங்குகின்றனர். ஆனால், மக்கள் வளர்ச்சிக்காக அவர்கள் செல்லவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ராகுலுக்கும் ஆதரவு தர வேண்டும். வரும் காலத்தில் நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிப் பீடம் ஏறும்.தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ராகுல் தான் முடிவு செய்வார். அவர் வழிகாட்டும் கூட்டணி தான் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும்.


ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களை (ராஜா) தி.மு.க.,விலிருந்து விலக்கி வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஒருவேளை சோனியாவும், ராகுலும் இந்த கூட்டணி வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டும் என்றால், இதுபோல நடவடிக்கைகளை எடுத்தால் தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு யுவராஜா பேசினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்து, இந்த யோசனையை வரவேற்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshveera - singapore,இந்தியா
26-நவ-201000:59:17 IST Report Abuse
rameshveera ஐயா! பெரியவரே! இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டாங்க நீ கருப்பு கண்ணாடிய போட்டுக்குட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருந்தே ! அதே நேரத்துலே தமிழ் தமிழ்னு வாய்ல தான் சொல்ற அங்கு கை கால்கல இழந்து தமிழனா பிறந்ததுக்காக நரக வேதனை அனுபவிக்கிறாங்க மத்திய அரசை ஏன்னு ஒரு வார்த்த கூட கேட்கலே தமிழ் நாட்டுலே உன்ன கேள்வி கேட்கிரங்கனு உலகத்தமிழ் மாநாடு நடத்தி அவங்களோட பார்வைய திசை திருப்ப பார்த்த ! அதிலும் நீ வரவழச்ச அறிஞர்கள்ள பாதிபேர் அறிஞர்களே இல்லையாம் . அதிலும் உனக்கு பெருத்த அவமானம் . காவிரி பிரச்சனை பத்தி பேச வேண்டிய நேரத்துலே எதுவும் பேசலே ! தேர்தல் வரப்போகுதுன்னு இப்பத்தான் அந்த பேச்சே எடுக்குரே ! ஒவ்வொரு வீட்டுக்கும் டிவி கொடுக்கிறே உன்னோட டிவி நெட்வொர்க்க வளக்குறதுக்காக இலவசமா கொடுத்தே . இப்ப நடந்த ஸ்பெக்ட்ரம் உழல்ல ராசா பதவி விலகினா நீயும் விரைவுலே சிக்கிருவம்னு போரடிபர்த்தே முடியலே . இப்ப தி மு க திண்டாடிக் கிடக்கு . தமிழ்நாட்ட உன் குடும்பமே ஆளனும்னா முடியுமா ? சென்னை ஏரியா ஒரு மகனுக்கு மதுர ஏரியா ஒருத்தனுக்கு பிரிச்சு கொடுக்கிறியா இது என்ன ................................. சொத்துன்னு நெனச்சியா ! அப்ப இருந்த மக்கள் வேற, இப்ப இருக்கிற மக்கள் வேற. இப்ப படிக்காத ஆளே இல்ல ! வர்ற தேர்தல்ல உனக்கு கிடைக்க வேண்டிய அவமரியாதை அனைத்தும் கிடைக்கும் ! அந்த நாள் வெகு விரைவில் வர எதிர்பார்க்கும் நான் நானும் ஒரு தமிழன் .
Rate this:
Cancel
டவ்சர் பாண்டி - டோஹா,கத்தார்
26-நவ-201000:58:57 IST Report Abuse
டவ்சர் பாண்டி வைத்த பணத்தை எல்லாம் வைத்து ஒரு தொழில் சாலை அல்லது விவசாயத்தை முன்னேற வைத்தால் இந்த அப்பாவி மக்கள் இங்க வந்து கஷ்டப்பட மாட்டார்கள் ... இன்று கூட என் ப்ரோஜெக்டில் இருக்கும் சப் கான்ட்ராக்டர் உள்ள தொழிலாளர் கேம்ப் இல் சாப்பாடு சரியாய் இல்லாமல் இருந்தும் வேலைக்கு வந்து உடம்பு சரி இல்லாமல் போய்.... நான் கேட்டேன் ஏன் இங்க வந்து கஷ்டபடுனும் என்று....எனக்கு வர வேண்டிய பஸ் டிரைவர் பணியை காசு & எம்.ல்.ஏ தெரிந்தவன் வாங்கிட்டான்....அங்க அரசாங்கம் சரியாய் இருந்தால் நான் எங்க ஏன் வர வேண்டும் தம்பி என்று சொன்னார்....இது மாதிரி ரெம்பா மனிதர்கள் தினம் கஷ்டபட்கிறார்கள்....அவர்கள் சாபம் உங்களை சும்மா விடாது. உன்னை மட்டும் இல்ல உன்னை மாதிரி இருக்கும் அரசியல் வாதி அனைவருக்கும் கிடைக்கும் தண்டனை...உனக்கு இல்லை என்றாலும் உன் வம்சம் அனுபவிக்கும்...
Rate this:
Cancel
நானும் ஒரு தமிழன் - மத்தியகிழக்குநாடுகள்,சவுதி அரேபியா
25-நவ-201023:30:20 IST Report Abuse
நானும் ஒரு தமிழன் அய்யா பெருசு, போ. போயி சினிமா டான்ஸ் நிகழ்ச்சி எதாவது இருந்தா பாரு போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X