சர்ச்சைக்குரிய நிரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

Added : நவ 25, 2010 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்புடைய நிரா ராடியாவிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மக்கள் தொடர்பு நிறுவன உரிமையாளரான நிரா ராடியா, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனங்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவர் பல முக்கிய பிரமுகர்களுடன் நடத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு அமலாக்க பிரிவினரிடம் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இவரது பங்கு குறித்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும், கடந்த 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த புதிய பதில் மனுவில், ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த டெலிபோன் உரையாடல்களை ஆய்வு செய்து வருகிறோம். பொருத்தமான நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து, அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று நிரா ராடியாவிடம் விசாரணை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவரது நிறுவனத்திற்கு இருந்த பங்கு பற்றியும், குறிப்பிட்ட சில டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வாங்கித்தர இவர் எந்த வகையில் உதவியாக இருந்தார் என்பது பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டதாக, அமலாக்க பிரிவு அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. சில நாட்களுக்கு முன்பு அமலாக்க பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்கு நிரா ராடியா மறுத்துவிட்டார். தனக்கு உடல்நிலை சரியில்லை என குறிப்பிட்டு இருந்தார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
25-நவ-201007:10:33 IST Report Abuse
பாலா ஸ்ரீனிவாசன் பாக்க அழகா இருப்பதோடு நல்லா ஆங்கிலமும் பேச தெரிஞ்ச பொம்பளையா இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாம்; இந்த அம்மாவோட பர்கா தத் என்கிற தொலைக்காட்சி அறிவிப்பாளினி டில்லியின் முக்கியமான புரோக்கர்; அத இன்னும் N.D நியூஸ் சேனல்ல விட்டு வெச்சிருக்காங்க; வெக்கமில்லாமல் அதுவும் 'இந்த அரசியல்வாதி மோசம் அவன் சரியில்லை' அப்டீன்னு கமென்ட் அடிசிக்கிட்டுதான் இருக்கு இன்னி வரைக்கும்! அதையும் கொஞ்சம் கவனியுங்களேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X