வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் : மகன், மகளுக்கு எடியூரப்பா உத்தரவு

Added : நவ 25, 2010 | கருத்துகள் (31)
Advertisement
வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் : மகன், மகளுக்கு எடியூரப்பா உத்தரவு

பெங்களூரு : நில மோசடி சர்ச்சையில் சிக்கியதால், தனது மகனையும், மகளையும், தனது அதிகாரப்பூர்வ வீட்டை விட்டு, உடனடியாக வெளியேறும்படி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.


கர்நாடகாவில் அரசுக்கு சொந்தமான நிலத்தை, தனது மகன் மற்றும் மகளுக்கு ஒதுக்கீடு செய்ததாக முதல்வர் எடியூரப்பா மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால், எடியூரப்பாவின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி, பா.ஜ., மேலிடமும் அவரை வற்புறுத்தியது. எப்படியோ மேலிடத்தை சமாதானப்படுத்தி, முதல்வர் பதவியில் நீடிக்கும் அனுமதியை எடியூரப்பா பெற்று விட்டார். எடியூரப்பாவின் அதிகாரப்பூர்வ இல்லம் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு அவரது மகன் விஜேந்திரா, மகள் உமா தேவி, மருமகன் ÷ஷாகன் குமார் ஆகியோரும் தங்கியிருந்தனர். தற்போது அவர்களை மையப்படுத்தி, நில மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், மேலும் பிரச்னைகளை தவிர்க்க நினைத்த எடியூரப்பா, அவர்களை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து முதல்வரின் செயலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "மகனையும், மகளையும் வீட்டை விட்டு வெளியேறி, வேறு இடத்தில் வசிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளது உண்மை தான். அவர்களும் இதை ஏற்றுக் கொண்டு, முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டனர். தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து, எந்த விஷயத்துக்காவது சலுகை காட்டும்படி கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்க வேண்டாம் என்றும், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.


இதற்கிடையே, பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா பேசியதாவது: சுயநலத்துடன் செயல்படுவோர், நிர்வாக விஷயங்களில் தலையிடுவதை விரும்பவில்லை. மீதமுள்ள என் இரண்டாண்டு பதவி காலத்திலும் நேர்மையான நிர்வாகத்தை அளிப்பேன். அரசு சார்பில் ஏராளமான சாதனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் இதை எல்லாம் பொருட்படுத்தாமல், அரசு மீது குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சி பணிக்காக தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssaravanan - nellai,இந்தியா
26-நவ-201022:28:29 IST Report Abuse
ssaravanan BJP prime minister வந்தால் தான் இந்தியா உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
KUMAR - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201021:03:21 IST Report Abuse
KUMAR "எப்படியோ எதையோ கொடுத்து மேலிடத்தை சரிகட்டி, முதல்வர் பசையில் நீடிக்கும் அனுமதியை இந்த ஊழல் மன்னன் எடியூரப்பா பெற்று விட்டார்"
Rate this:
Share this comment
Cancel
அருள் - சென்னை,இந்தியா
26-நவ-201019:54:00 IST Report Abuse
அருள் தமிழ் நாட்டிலும் அரசியல் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினரை விலக்கி வைத்தால் நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X