ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்'

Added : நவ 25, 2010 | கருத்துகள் (115)
Advertisement
ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்'

அலகாபாத் : ""ஊழல் தடுப்பு நடவடிக்கையில் எங்களைப் போல செயல்படுங்கள்,'' என, எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அறிவுறுத்தியுள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது: மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கைகள் ஒளிவு மறைவில்லாதவை. பாமரர்களின் நலனுக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடுகிறது. ஊழலற்ற நிலையை ஏற்படுத்த அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருக்கக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறோம். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு, ஊழல் செய்வதாக கூறும் எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை கண்டு கொள்வதில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன. எனவே, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வும் வளம் பெற வேண்டும், என்பது தான் எங்களின் விருப்பம்.


உத்தரபிரதேசத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி பல நலத்திட்டங்களுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் உயரவேண்டும், என்பது தான் எங்கள் நோக்கம். மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உரிய முறையில் மக்களுக்கு சென்று சேர வேண்டும். ஆனால், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை ஊழல் மயமாக உள்ளது. இவ்வாறு சோனியா பேசினார்.


இது குறித்து, உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி குறிப்பிடுகையில், "இந்த மாநிலத்தை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது காங்கிரஸ் தான். அடிப்படை வசதியில்லாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு. அரசியலமைப்பின்படி மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. தனிப்பட்ட முறையில் இந்த மாநிலத்துக்கு காங்கிரஸ் அரசு எதுவும் செய்து விடவில்லை. உத்தரபிரதேசத்துக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை 16 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.


பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் குறிப்பிடுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்கத் தவறிய பிரதமர் குற்றம் செய்தவராவார். இந்த விஷயத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் எங்களை குறை கூறிய காங்கிரஸ் கட்சி, தற்போது பீகாரில் மண்ணை கவ்வியுள்ளது. கர்நாடகா விவகாரத்தில் எங்களை குறை கூறும் சோனியா, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமைக்க தயங்குவது ஏன்?' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar G Mudhaliyar - Chennai,இந்தியா
02-செப்-201120:50:59 IST Report Abuse
Sundar G Mudhaliyar அந்நிய நாட்டின் அபூர்வ சிந்தாமணியே, ஆரிய இனத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை அழிக்க பேரம் பேசியது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. திமுக வை 2G ஸ்பெக்ட்ரம் ல் கோர்த்து விட்டது தயாநிதி மாறனின் பதவியை பறிக்க திட்டம் தீட்டியது உட்பட பல தகவல்கள் மக்களுக்கு தெரியும். காந்தி நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய பொழுது அதை அரசியலாக மாற்றியவர் தானே நேரு. அதன் விளைவாக தான் இந்திரா சஞ்சீவ் ராஜீவ் என வரிசையாக கொல்லப்பட்டுள்ளனர். தயவு செய்து சொல்கிறேன் தமிழகத்திற்கு மட்டும் வந்துவிடதிர்கள். தமிழ் இனத்தை அழிக்க மட்டும் நினைக்க வேண்டாம். பார்த்திர்களா 30.08.11 அன்று தமிழகத்தில் ஏற்பட்ட நிலையை. செயல்+அளித்தவுடன் பேசப்பட்ட பேரம் தோல்வியில் முடிந்ததால். அவரின் ஆட்சியை கலைக்க வழி வகுப்பிர்கள் என்று தெரிகிறது. மற்றொரு முக்கியமான தகவல் கடந்த திமுக ஆட்சியில் இந்த முன்று பேரையும் அழிக்க திட்டம் தீட்டி அதை திமுக தலைவர் திரு.கருணாநிதி செய்ய மறுத்தால் தானே 2G ஸ்பெக்ட்ரம், எதிர்க்கட்சி என்று அரசியல் தெரியாதவரை அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு புரியாமல் தான் கேட்கிறேன் உங்களுக்கும் பிரதமருக்கும் தெரியமல தான் 2G ஸ்பெக்ட்ரம் நடந்ததா?. அது எப்படி தலைமை ஆசிரியர்க்கு தெரியாமல் முக்கிய முடிவுகளை ஆசிரியர்களே எடுப்பர்களா என்ன?. நீங்கள் நாடகம் நடிப்பதில் கை தேர்ந்தவள் என்று தெளிவாக புரிகிறது. என்றும் தமிழ் அன்பன்.கவி.சுந்தர்.
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - மதுரை,இந்தியா
29-நவ-201008:40:18 IST Report Abuse
திராவிடன் ஒரு சந்தேகம் எனக்கு.இந்த ராசா பெயர் எல்லாம் கின்னஸ்ல போட மாட்டாங்களோ? கின்னஸ் சாதனைல போட்டா அதுல வர்ற பணத்த இலவச டிவி ல காட்டிகிட்டே என் வீட்டை மருத்துவமனைக்கு கொடுக்கிறேன்னு சொன்னது போல ஏதோ இலவசமா கொடுத்துடலாம்.நம்ம சனங்க ஓட்டு ஆளும் கட்சிக்கு தான்.
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - மதுரை,இந்தியா
29-நவ-201008:30:31 IST Report Abuse
திராவிடன் காங்கிரஸ் ஆட்சி படைத்த உலக(ஊழல்) சாதனைக்கு வாழ்த்துக்கள். பாராட்டு விழா நட்டத்த நான் தயார். டேட் கொடுக்க தலைவர்கள் நீங்க தயாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X