அரசியல் செய்தி

தமிழ்நாடு

புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன் : மாஜி அமைச்சர் ராஜா

Updated : டிச 01, 2010 | Added : நவ 29, 2010 | கருத்துகள் (240)
Advertisement

ஊட்டி : "என் மீது விமர்சனங்கள் வரலாம்; ஆனால், தொலைதொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன்' என, முன்னாள் அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ராஜா தெரிவித்தார்.


ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா கூறியதாவது: நான் பொதுவாழ்வுக்கு வந்து, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீலகிரி மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவி போய்விட்டால் முடங்கி போய்விட மாட்டேன். லோக்சபா தேர்தலில் என்னை அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் நீலகிரி மக்கள் வெற்றி பெற செய்தனர். அதன் மூலம் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் பதவி கிடைத்தது. அந்தத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினேன். ஏழை தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பாமர மக்களுக்கும் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியே பதவியை துறந்தேன்.


என் முயற்சியில் நிமிடத்துக்கு 1.60 என்றிருந்த கட்டணம், 10 பைசாவாக குறைக்கப்பட்டது. 30 கோடியாக இருந்த தொலைபேசி இணைப்புகள் தற்போது 73 கோடியை எட்டியுள்ளது. என் மீது விமர்சனங்கள் வரலாம். நீதிமன்றத்தில் இந்த விவகாரம் இருப்பதால் நான் அதிகம் பேச மாட்டேன். தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன்பு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. ஒரு அரசியல் கட்சி தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதி அளிக்கும், அதில் சிலவற்றையே நிறைவேற்ற முடியும். ஆனால், தி.மு.க., அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு ராஜா கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (240)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எட்வர்ட் - USA,யூ.எஸ்.ஏ
07-டிச-201001:14:30 IST Report Abuse
எட்வர்ட் டேய் ராசா ஒனக்கு வெட்கமா இல்லே.
Rate this:
Share this comment
Cancel
Raja - Tirupur,இந்தியா
04-டிச-201011:09:01 IST Report Abuse
Raja தமிழ் நாட்டு மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் அறிவே வராது,வாய் கிழிய கமெண்ட்ஸ் கொடுப்பிங்கே, ஆனா மறுபடியும் எவன் ஓசிலே எது கொடுத்தாலும் வாங்கிட்டு அவனுக்கே ஒட்டு போடுவீங்க, போங்கடா, வேற வேலை இருந்தா போய் பாருங்கடா
Rate this:
Share this comment
Cancel
அன்பு தாஸ் மற்றும் ராம மணி - அல்க்ஹோபர்,சவுதி அரேபியா
03-டிச-201022:46:42 IST Report Abuse
அன்பு தாஸ் மற்றும் ராம மணி ராசாவே ஒன்ன நம்பி... கட்டணக் குறைப்பு, நொடிக்கான பல்ஸ் ரேட் போன்றவைகளெல்லாம் டெக்னாலஜி-யின் விளைவுகள். ஒரு ராசா, அல்லது ஒரு கூஜா அல்லது ஒரு விஜயகாந்த் அல்லது வடிவேலு அல்லது ----- யார் மந்திரியாக இருந்தாலும் கைப்புள்ள பாஷைல சொன்னா அந்த ரெண்டு டவுசரு பசங்கள்ல ஒருத்தன் இந்தத்துறை மந்திரியானாலும் இவ்விதச் சலுகைகள் கிடைக்கும். நீ செய்தது ஊழலில் புரட்சி. வெக்கமில்லாம இப்படிப் பேசுவதற்கு பதிலா "வேற" ஏதாவது 'வேலை' பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X