பொது செய்தி

இந்தியா

நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு

Updated : நவ 30, 2010 | Added : நவ 29, 2010 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : நிரா ராடியாவுடன் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், டெலிபோனில் பேசிய விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் உளவுப் புலனாய்வுப் பிரிவு மற்றும்  நேரடி  வரிவிதிப்புத் துறை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அத்துறை அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார்.  இந்த மெகா மோசடியை விசாரிக்க பார்லிமென்ட் கூட்டு நடவடிக்கை குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. இந்த சூழலில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் பெரியளவில் பேசப்பட்டதை அடுத்து, டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரதிநிதியாக பணியாற்றிய நிரா ராடியா என்ற பெண், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களுடன் டெலிபோனில் பேசிய பதிவுகள், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாயின. தொழிலதிபர் டாடாவுடன், நிரா ராடியா பேசிய பதிவும் இதில் அடக்கம். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் ரத்தன் டாடா மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்நிலையில், நிரா ராடியாவுடன் பிரபலங்கள் உரையாடிய விவகாரம், மீடியாக்களில் கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், "டெலிபோன் பேச்சுக்கள் எப்படி, யாரால் வெளியிடப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ., மற்றும் மத்திய நேர்முக வரி வாரியம் (சி.பி.டி.டி.,) விசாரிக்கும்' என்றன. இதனிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம்  விவகார  முறைகேடு விசாரணைகளை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையிட்டாலும், அதற்கு அரசு ஆட்சேபிக்காது என, தகவல் தொடர்பு அமைச்சர்  கபில் சிபல்  தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan - Chennai,இந்தியா
30-நவ-201021:10:37 IST Report Abuse
Thiyagarajan டாட்டா வழக்கு போட்டால் அன்றே விசாரணை. சுப்ரமணிய சுவாமி வழக்கு போட்டால் அடுத்த ஜென்மத்தில் விசாரணை. சப்பாஷ் சோனியா, மனு நீதி சோழனே உன்னிடம் நீதி கற்றுகொள்ளவேண்டும், நீதி தேவதையே! அண்டியவற்கு அள்ளிகொடுக்கும் நிதி தேவதையே! இந்த நாடே உனக்கு நிவேதனமே! ஏற்றுக்கொண்டு அருள்புரியம்மா! ஆதிபராசக்தியே!
Rate this:
Share this comment
Cancel
சாமி - MUSCAT,ஓமன்
30-நவ-201014:07:05 IST Report Abuse
சாமி 2 ஜி ஸ்பெக்ட்ரம் மிக பெரிய ஊழல் அதை விசாரிக்க, நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடாத, தைரியம் இல்லாத இந்த முதுகெலும்பில்லாத மத்திய அரசு, நிரா ராடிய பேசியது எப்படி வெளியில் வந்தது என்பதை மட்டும் விசாரிக்க அரசு ஏன் இவ்வளோ அக்கறை காட்டுகிறது???????????????????????
Rate this:
Share this comment
Cancel
Arun - Doha,கத்தார்
30-நவ-201013:25:42 IST Report Abuse
Arun இப்டியே எல்லாரும் முடிஞ்ச அளவு சொரண்டி ஓட்டு போட்ட அப்பாவி மக்களை ஏமாத்துறீஙக. இந்தியா ஊழ்லில் முதல் இடத்துக்கு வந்திடும் போலிருக்கு... உங்களை யாரலும் மாத்த முடியாது. மக்களை இலவசம் கொடுத்து ஏமாத்துறீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X