பொது செய்தி

இந்தியா

சிறுமி அர்ச்சகர் ஆனார் வழிகாட்டுகிறது கேரளம்

Added : ஜூன் 06, 2010 | கருத்துகள் (12)
Advertisement
kerala girl pandit கேரள சிறுமி அர்ச்சகர்

திருச்சூர் : ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, நாட்டில் முதன் முறையாக கோவில் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கல்வியில் முதலிடத்தில் இருக்கும் கேரளா, கோவில் அர்ச்சகர்களாக பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டியுள்ளது. கேரளாவில் உள்ள கோவில்களில், "தந்திரி' (அர்ச்சகர்) களாக ஆண்கள்தான் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, இந்துமத சாஸ்திரங்களிலும், ஆகமங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இரிஞ்ஞாலக்குடாவிலுள்ள தரனநெல்லூர் மடம் மற்றும் ஆலப்புழை மாவட்டத்தின் செங்கண்ணூரிலுள்ள தாழமோன் மடம் ஆகிய, இரண்டு, "தந்திரி' பயிற்சிப் பள்ளிகள் கேரளாவில் புகழ்பெற்றவை. இவற்றில் தரனநெல்லூர் மடத்தைச் சேர்ந்த பத்மநாபன் நம்பூதிரிபாடு என்பவரின் மகள் ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு(11) என்ற சிறுமிதான், முதன் முறையாக நாட்டில் பெண் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூர் மாவட்டம் காட்டூரில், பத்மநாபனின், தரனநெல்லூர் வீட்டுக்குச் சொந்தமான பயிங்கன்னிக்காவு என்ற துர்கா கோவிலில், சிறுமி ஜ்யோத்ஸ்னா அர்ச்சகராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அக்கோவில் மூலஸ்தானத்தில் துர்கா தேவியின் விக்ரக பிரதிஷ்டையை தன் குரு முன்னிலையில், சிறுமி செம்மையாக நடத்தி வைத்தார். பின், அதற்கான மண்டல பூஜைகளையும் நடத்தி வருகிறார்.

சிறுமியின் சிறுவயது முதலே, பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறார் பத்மநாபன். அவருக்கு மந்திர அதிகாரத்துக்கான "மந்திர தீட்சை' அளித்து, பின், ஆகம பூஜைகளைக் கற்றுக் கொள்வதற்கான "கர்ம தீட்சை'யும் அளித்துள்ளார். "தந்த்ர (ஆகம) பூஜைகளைப் பெண்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் விதிக்கவில்லை. தந்த்ரங்களைக் கற்றவர் யாராயினும், "தந்திரி' ஆகலாம். ஆனால், நாம் அதைப் பற்றி சிந்திப்பதில்லை. அத்துறையில் ஆண் அர்ச்சகர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதுதான் இதற்குக் காரணம்' என்கிறார் பத்மநாபன்.

"ஆகமங்களைக் கற்பதில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்பேன்' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஜ்யோத்ஸ்னா. துர்கா தேவிக்கு ஆகம விதிப்படி, பிரம்மகலச அபிஷேகம், பரிகலச அபிஷேகம் ஆகியவற்றைச் செய்து முடித்தபின், பக்தர்களுக்கு அவர் பிரசாதம் வழங்கினார். அவரது பெற்றோர் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

தரனநெல்லூர் மடம், மத்திய கேரளாவின் இரிஞ்ஞாலக்குடாவிலுள்ள கூடல் மாணிக்கம், திருப்பிறையாற்றிலுள்ள ராமர் கோவில் ஆகியவற்றிலும் "தந்திரி'களை நியமித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THIRUVENKATAM SURESH - TORONTO,கனடா
09-ஜூன்-201008:39:39 IST Report Abuse
 THIRUVENKATAM SURESH I THINK IN INDIA HAS CHILD LABOUR ABOLITION ACT???????? WHAT ARE THE COLLECTORS ARE DOING?????? AND THE GOVERNMENT ALSO?????
Rate this:
Share this comment
Cancel
த.Arulmony - Chennai,இந்தியா
08-ஜூன்-201016:34:44 IST Report Abuse
 த.Arulmony Very bad example. What about the schooling of ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு. Child labor? Instead of developing the mind and body, the innocent ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு will come around the temple. So hereafter, Kerala will not stop water flow into Tamil Nadu. With the prayer of ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு. Instead of wasting water, Kerala will allow it into Tamil Nadu for better agricultural production. We all know the reality. In Kerala, there is no opportunity for educated. They have to migrate from the state. The natural resources are not used properly. Any kind of jobs other than manual work are welcome in Kerala. ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு will have time to work in the temples, since schools in Kerala are not working in all days in year as like other states. Malyalees send their children to other states for good education. Maximum about 100 days only schools are functioning. This kind of work can be viable in Kerala in the present situation since due to recession many malyalees are sent back to Kerala. ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு is paid for her work now. If so really it is an offence. In the name of God, a small child is held up in temple. Release her please. Let her select her job after she become adult. In Tamil Nadu, also some Christian preachers engage their children in preaching.
Rate this:
Share this comment
Cancel
T .G .பா.சு.மணியன். - USA,இந்தியா
07-ஜூன்-201023:03:39 IST Report Abuse
 T .G .பா.சு.மணியன். வேதம் கற்க எந்த கட்டுப்பாடும் இல்லை. தமிழ் வேதங்கள் பழைய காலத்தவை அழிந்து போய்விட்டதால், சமஸ்க்ரித வேதங்களை நம்ப வேண்டி உள்ளது. தமிழ் ஆகமங்கள் பலவும் அழிந்து ஒரே ஒரு சமஸ்க்ரித ஆகமம் மட்டுமே உள்ளது. இது தமிழர்களின் தமிழ் பட்றை பறை சாற்றுகிறது. வேதங்களை 'ஒரு இனத்தவர் மட்டுமே கற்கலாம், பெண்கள் படிக்கக்கூடாது' என்பது பிற்கால சாஸ்திரங்கள் விதித்தது. இதில் உண்மை இல்லை. வேத பாடல்களை சில பெண் முனிகளும் (Gargi ) இயற்றி உள்ளனர். ஜெர்மனி மேக்ஸ் முல்லர், டேவிட் ப்ராலி போன்ற பல வெளி நாட்டவரும் வேதம் படித்து உரை எழுதி உள்ளனர். ஏசு நாதரே வேதம் படித்ததாக சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன (சில்விய பிரவுன், USA எழுதிய 'தி மிஸ்டரி லைப் ஒப் ஜீசஸ் 2006. கிறிஸ்டின், ஜேர்மனி எழுதிய ஜீசஸ் lived இன் இந்தியா மற்றும் பல நூல்கள்) வேதங்களை அனைவரும் கற்கலாம். பழம் காலங்களில் அனைத்து இனத்தவரும் வேதம் கற்று அறிந்தவர்களாகவே இருந்தனர். பிற மொழிகளை கற்பதால் தமிழ் அழியாது. முன் காலங்களில் பல தமிழ் அறிஞர்கள் பன் மொழி புவவர்கலாக இருந்திருக்கின்றனர். தேவநேய பாவாணர் 14 மொழிகள் அறிந்தவர். இவர் தமிழில் 'தமிழ் லடிகோன்' தொகுப்பை 34 புத்தகங்களாக எழுதியவர். இதை தவிர பல தமிழ் ஆராய்ச்சி நூல்கள் எழுதியவர். வேதம் அனைவரும் கற்கலாம். தவறு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X