சோனியா வாழ்க்கை புத்தகம்: தலைவர் மீது வழக்கு?

Added : ஜூன் 07, 2010
Advertisement

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட "தி ரெட் சாரி' என்ற தலைப்பிலான புத்தகம் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், அதைப் பற்றி குறை கூறும் காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மீது வழக்கு தொடரப்போவதாக எழுத்தாளர் ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜேவியர் மோரோ கூறியதாவது: ராஜிவ் படுகொலை செய்யப்பட்டு அவருக்கு இறுதிச் சடங்கு நடந்ததை "டிவி'யில்பார்த்தேன். அப்போது தான் சோனியாவை பற்றி எழுத முடிவு செய்தேன். 2008ல் "எல் சாரி ரோஜோ' என்ற தலைப்பில் ஸ்பேனிஷ் மொழியில் இந்த புத்தகம் எழுதப்பட்டது.


இதன் ஆங்கில மொழியாக்க நூல் வெளியிட திட்டமிடப்பட்டுள் ளது. இன்னும் சந்தைக்கு வராத இந்த ஆங்கில மொழியாக்கத்தை வாங்கிப் படித்து கருத்து வெளியிட்டுள்ள அபிஷேக் சிங்வி மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். சோனியாவை பற்றி அவதூறாக எந்த செய்தியும் இந்த புத்தகத்தில் குறிப்பிடவில்லை. மாறாக சோனியா குடும்பத்தை பற்றி உயர்வாகத் தான் எழுதியுள்ளேன். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் யாரும் இந்த புத்தகத்தை முழுமையாக படிக்காமல் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த புத்தகம் வெளியாகும் போது இந்தியாவுக்கு செல்வேன். இவ்வாறு மோரோ கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X