டி.என்.பாளையம்:மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பவானிசாகர் பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், பசுவபாளையம், புங்கார், தொட்டம்பாளையம், எரங்காட்டூர் பகுதி விவசாயிகள் மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் பயிரிட்டுள்ளனர். மஞ்சள் பத்து மாதப்பயிர். வைகாசி மாதம் நடவை துவங்கி மாசி மாதம் அறுவடை முடியும். ஒரு ஏக்கருக்கு மஞ்சள் பயிரிட 750-800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ விதை மஞ்சள் 30-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெட்டுக்கூலியோடு சேர்த்து ஏக்கருக்கு நடவு செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 15-20 டன் வரை அறுவடை கிடைக்கிறது. சென்றாண்டு மஞ்சள் விலை உச்சியை தொட்டதையடுத்து இம்முறை மஞ்சள் சாகுபடி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மஞ்சள் விளைவிப்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்று விவசாயிகள் நம்பி பெருமளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். மஞ்சளுடன் ஊடுபயிராக வெங்காயத்தைதான் பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். ஆனால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மஞ்சளுக்கு ஊடுபயிராக மிளகாயை பயிரிட்டுள்ளனர். மிளகாய் பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, லாபமும் பெருகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE