| லட்சம் கோடி முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்| Dinamalar

லட்சம் கோடி முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்

Updated : டிச 09, 2010 | Added : டிச 09, 2010 | கருத்துகள் (226)
Advertisement

புதுடில்லி : மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், யார், யாருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்பது குறித்த விவரம் அம்பலமாகியுள்ளது. தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரியில், இந்த பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை அளித்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாகவும், சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகள் காரணமாகவும், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, தனது பதவியை ராஜினாமா செய்தார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால், கடந்த மூன்று வாரங்களாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இதன் காரணமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வேகம் பிடித்துள்ளது. நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக களத்தில் இறங்கினர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் டில்லி, பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகள், தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் பெர்சனல் டைரியையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக, ராஜாவால் தமிழில் எழுதப்பட்ட அவரது பெர்சனல் டைரிகளும் கைப்பற்றப்பட்டன. இவை, 2003லிருந்து 2010 வரையிலான காலங்களில் எழுதப்பட்டவை. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த விவரங்கள், இந்த டைரிகளில் இடம் பெற்று உள்ளன. இதில், அரசு வக்கீல்கள் இருவர் பற்றியும், டில்லி மற்றும் சென்னையில் உள்ள ஹவாலா டீலர்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள், முன்னாள் அமைச்சரின் சார்பில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் நேற்று முன்தினம் நடந்த சோதனையில், ராஜாவுக்கு நெருக்கமான சாதிக்பாட்சா, ஏழு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் தலைமையில் செயல்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம், குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை கையாண்டதால், ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபின் தான் தகவல் தெரியவரும்.


இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி, சென்னை, காஜியாபாத்தில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எந்த வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்தும், ராஜாவிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்தும் தற்போது தெரிவிக்க முடியாது. சோதனையின் போது, சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (226)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாபு - coimbatore,இந்தியா
11-டிச-201007:13:32 IST Report Abuse
பாபு அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராஸாவுக்காக ...(2) எங்க எங்க கொஞ்சம் நான் கேக்கறேன்... கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்(2) அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக… டைரி ஒண்ணு மாட்டி இருக்கு... அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு முத்தமிழர் மாட்டி குடுக்க.... அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு ஏதுடா வம்பா போச்சி பார்லிமெண்ட்டும் கெடயாது ரவுண்டு கட்டி JPCக்கு காத்திருக்கு நம்மால டாடா வந்து கண்ணசச்சா ..பத்திக்கிடும் பின்னால எக்கு தப்பு வேணாம் ம்ம்.. அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. எங்க எங்க கொஞ்சம் நான் கேக்கறேன்... கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2) அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக.. தாமஸ்-ஐ தான் தலைவர் ஆக்கவா? அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?? வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா அதுக்காக ஊட்டில பந்தி வைக்கவா ஓடிவா பெரம்பூர் பக்கம் ஒளியலாம் மெதுவாக அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க விசாரிசா தாங்கதடி பதுக்கல்களும் கோடிகளும் மஞ்சதுண்டிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு போடி புள்ள எல்லாம் டூப்பு…. அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராசாவுக்காக (2)
Rate this:
Share this comment
Cancel
balan - chennai,இந்தியா
11-டிச-201003:06:57 IST Report Abuse
balan டியர் செந்தில், உங்கள் மெயில் அட்ரஸ் கொடுங்கள்.. நாம் ஊழலை எதிர்த்து ஒரு குரூப் ஆரம்பிக்கலாம்..அப்புறம் நம்மால் முடிந்ததை செய்யலாம். சிறு துளி பெருவெள்ளம், மற்றவர்களும் சேரலாம். என் அட்ரஸ் balan dot natarajan at rediffmail dot com
Rate this:
Share this comment
Cancel
இந்து - siouxfalls,யூ.எஸ்.ஏ
11-டிச-201002:46:28 IST Report Abuse
இந்து நான் கார்த்திக் (miniopollis) சொல்லவதை ஆதரிக்கிறேன்.ooman செந்தில் குமார் சொல்வது போலே மக்கள் ஒரு இணையத்தளம் உருவாக்கி தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.அதற்கு இணங்க போலீஸ் பண்ணியாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X