வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்: 14 பேர் பலி

Added : டிச 10, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

டாக்கா: : வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். டாக்காவில் இருந்து சிட்டகாங்குக்கு புதன்கிழமை சென்ற ரயில் நரசிங்கடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்றது. சிக்னல் கிடைத்ததும் அது சிட்டகாங்கை நோக்கி புறப்பட்டது. அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தடத்தில் டாக்கா நோக்கி எதிரில் ஒரு ரயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இரு ரயில்களின் ஓட்டுநர்களும் ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்காமல் இரு ரயில்களும் ஒன்றோடொன்று  பயங்கர சத்தத்துடன் மோதியது . இந்த விபத்தில் 14 பேர் இறந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  விபத்தில் சிக்கி நொறுங்கிக்கிடக்கும் ரயில் பெட்டிகளுக்கு இடையே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
 


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயம் - கோவை,இந்தியா
10-டிச-201012:36:55 IST Report Abuse
ஜெயம் jay - chennai,இந்தியா; உலகம் அழிய வில்லை மனிதன் உலகை அழித்து கொண்டிருக்கிறான்.
Rate this:
Cancel
jay - chennai,இந்தியா
10-டிச-201008:26:06 IST Report Abuse
jay உலகம் அழிய தொடங்கி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X