அரசியல் செய்தி

தமிழ்நாடு

கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ஏற்கும்: முதல்வர்

Added : டிச 10, 2010 | கருத்துகள் (30)
Share
Advertisement
கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ஏற்கும்: முதல்வர்

சென்னை : கத்தார் நாட்டுச் சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்குமென, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டினம், முட்டம், கன்னியாகுமரி, இணையம், கோவளம், பெரியவிளை, கொட்டில்பாடு, சைமன்காலனி, குளச்சல் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா, பக்ரைன் போன்ற அரபு நாடுகளில் மீன்பிடிப் படகுகளில் மீன்பிடித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். கடலில் மீன் பிடிக்கும் போது, கத்தார் நாட்டு எல்லைக்குள் சென்றதற்காக, அந்நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகளால், 49 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் படகு உரிமையாளர்கள் கைவிட்டுள்ள நிலையில், அந்த மீனவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான வழக்கு மற்றும் கோர்ட் செலவுகளை தமிழக அரசே ஏற்குமென, முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
syedali - muscat,இந்தியா
11-டிச-201020:54:01 IST Report Abuse
syedali புரிந்து கொள்ளுங்கள் சிலரின் வயிறு எரிவதை ! நன்றி சொல்லுங்கள் நன்றி சொல்லுங்கள் நல்லதே கேட்டால் அது தமிழன் பண்பாடு !
Rate this:
Cancel
nameshkannan - மோகpunjab,இந்தியா
11-டிச-201016:51:13 IST Report Abuse
nameshkannan தலைவர் பாராடுக்கள், பணிகள் துடரட்டும்
Rate this:
Cancel
கே.பாரி பாலாஜி - chennai,இந்தியா
11-டிச-201016:13:26 IST Report Abuse
கே.பாரி பாலாஜி அதே போல் மலேசிய சிறையில் வாடும் தமிழர்களையும் மீட்டால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X