விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

Added : டிச 14, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொல்லம் : சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குள், விதிகளை மீறி நுழைந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே, குளத்துப்புழா தைக்காடு குன்னின்புரா பகுதியில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி திறப்பு விழா நடந்தது. சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் மற்றும் அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் ஆகிய, இருவர்

கொல்லம் : சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குள், விதிகளை மீறி நுழைந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே, குளத்துப்புழா தைக்காடு குன்னின்புரா பகுதியில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி திறப்பு விழா நடந்தது. சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் மற்றும் அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் ஆகிய, இருவர் பங்கேற்றனர். ஆனால், அவர்கள் சவுதி அரேபிய நாட்டின் தூதரக அனுமதியோ, இந்திய நாட்டின் தூதரக அனுமதியோ பெறாமல், பயணிகள் விசா மூலம், கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆயூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர்கள் குறித்து, ரகசிய தகவல் கிடைத்ததும், சடையமங்கலம் போலீசார் அவர்களை கைது செய்தனர். பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.
 


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா - Mumbai,இந்தியா
15-டிச-201017:49:15 IST Report Abuse
ராஜா உண்மையான பயங்கர வாதிகள், தீவிரவாதிகள், குழப்ப வாதிகள் அனைவரும் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அடிவருடிகள்=காவி தீவிரவாதிகள்) நாட்டில் சந்தோசமாக பாதுகாப்போடு வளம் வருகிறார்கள். ஆனால் அப்பாவிகளும், ஏழைகளும் இப்படித்தான் கைதாகிறார்கள். அவர்கள் சவுதி அரேபிய நாட்டின் தூதரக அனுமதியோ, இந்திய நாட்டின் தூதரக அனுமதியோ பெறாமல், பயணிகள் விசா மூலம், கள்ளத்தனமாக நாட்டிற்குள் எப்படி நுழைய முடியும். அப்படியானால் தினமலர் பத்திரிகை சுங்கத்துரையையும், இந்திய அரசின் காவல் துறையையும் கேனப்பய கூட்டம் என்கிறதா? அரசு கவனம் எடுக்குமா? இந்த தினமலர் போன்ற காவி கயவர்களின் பிடியிலிருந்து, இவர்கள் பஹ்திரிக்கை தருமம் என்ற பெயரில் செய்யும் பத்திரிகை விபச்சாரத்தை தடுக்குமா?
Rate this:
Cancel
15-டிச-201009:57:04 IST Report Abuse
துபாயில் இருந்து சில்லு வண்டு என்ன மிஞ்சி போனா ஒரு 1000 பைன் அடைக்க சொல்லுவீர்கள்;;;ஆனால் அவனுக நாட்டில் நம்மளை பட்டய கலட்டி புடுவாணுக;;;
Rate this:
Cancel
குப்பன் - கோவை,இந்தியா
15-டிச-201008:22:33 IST Report Abuse
குப்பன் கேரளாவில் சில காலமாக தீவிரவாதிகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. அரசு இரும்பு கரம் கொண்டு இதை நசுக்க வேண்டும் இல்லையேல் கேரளாவும் இன்னொரு காஷ்மீர் ஆகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X