அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜாத்தி, கனிமொழி பரபரப்பு அறிக்கை

Added : டிச 16, 2010 | கருத்துகள் (60)
Advertisement

சென்னை:""நில விவகாரத்திற்கும், எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது,'' என, முதல்வரின் துணைவி ராஜாத்தி மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:எனக்கு சொந்தமான, "ராயல்' நிறுவனத்தில் சரவணன் பணியாளராக இருந்தார். பின், நிறுவனத்தில் இருந்து பிரிந்து சென்று, தனியாக நிலம் வாங்கி, விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.


சென்னை அண்ணா சாலையில், "வோல்டாஸ்' நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை, அந்த இடத்தின் உரிமையாளரிடம், "பவர் ஆப் அட்டர்னி' முறையில் சரவணன் வாங்கி, மலேசிய நாட்டு தொழிலதிபர் சண்முகநாதனுக்கு விற்றிருப்பதாக தெரிகிறது.சண்முகநாதன் என்பவருக்கும், எங்களது, "ராயல்' நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல், வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால், அந்த இடத்தை நான் வாங்கியதை போல் சில, "மீடியாக்கள்' வேண்டும் என்றே, தவறான செய்தியை உள்நோக்கத்துடன் வெளியிடுகின்றன. தொடர்ந்து, இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு ராஜாத்தி தெரிவித்துள்ளார்.


கனிமொழி கருத்து:""சி.பி.ஐ., ரெய்டு காரணமாக தி.மு.க., - காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பும் இல்லை,'' என, கனிமொழி எம்.பி., கூறினார்.சென்னையில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சென்னையில் சமீபத்தில் நடந்த ரெய்டு, தி.மு.க., - காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள்; எங்களுக்கு பின்னால் எதுவும் இல்லை என்பதை நிரூபிப்போம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, 2001ம் ஆண்டு முதல் விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.


சென்னை அண்ணா சாலையில் உள்ள, "வோல்டாஸ்' நிறுவனம் இயங்கி வந்த நிலம், டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. இது தனியாருக்கு சொந்தமான நிலம். இதில் சரவணன் என்பவர் தான் வாங்கியவருக்கும், விற்றவருக்கும் இடையில் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.இதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அந்த நிலத்தை மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கியுள்ளார். இதில் எங்களை எப்படி தொடர்புபடுத்தினர் என்று தெரியவில்லை.இவ்வாறு கனிமொழி கூறினார். 


Advertisement


வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜயன் - ஹார்ட்போர்ட்,யூ.எஸ்.ஏ
18-டிச-201002:14:44 IST Report Abuse
விஜயன் நமக்கு வாய்த்த அடிமைகள் மிக்க முட்டாள்கள்.. ஆனால் வாய் தான் காது வரை நீளம். கொஞ்சம் கீழே வந்திருக்கும் கமெண்டுகளை படித்து பார். -- by கருணாநிதி
Rate this:
Share this comment
Cancel
tony - nmnbv,ஹங்கேரி
17-டிச-201023:37:24 IST Report Abuse
tony ராஜாத்தி அம்மாளுக்கு முதல்ல ராயல் நிறுவனம் ஆரம்பிக்கிறதுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று சொல்ல முடியுமா? முளைச்சு மூணு இல விடாத பொடியங்க எல்லாம் சினிமா எடுத்து தள்றான்..எல்லாம் ஏழை தமிழன் போட்ட பிச்ச தான். இவ்வளவு பணத்த வச்சிட்டு வாழ்ற அரசியல்வாதி குடும்பம் இந்தியால தான் இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
பாபு - coimbatore,இந்தியா
17-டிச-201022:40:05 IST Report Abuse
பாபு இத்தனை விசங்களையும் ஊடகங்களில் பார்த்த பின் நம்ப பகுத்தறிவு கதாநாயகன்.. அதாங்க.. மஞ்ச துண்டு என்ன சொல்வார் தெரியுமா? "அடக்கடவுளே" ஹீ ஹீ!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X