விமான நிலையத்தில் திடீர் ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி

Added : டிச 20, 2010 | கருத்துகள் (4)
Advertisement

டாக்கா: வங்‌‌கதேசத்தில் விமான நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த  பெரிய திரையில் திடீரென ஆபாச படம் ஒடியதால் அங்கு கூடியிருந்த பயணிகளிடையே அதி்ர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து உரிய விசா‌ரணை நடத்தும்படியும் வங்க தேச சிவில் ‌விமான போக்குவரத்திற்கு  உத்தரவி்ட்டு்ள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில்  ஹஸ்ரத் ஷகாஜலா சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் குவிந்திருந்தனர்.  அப்போது விமான நிலையத்தில் பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் ( ஸ்கிரீன்) திடீரென ஆபாச படம் தெரிய ஆரம்பித்தது.  இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சுமார்  5 நிமிடம் வரை ஓடியதால் சிலர் முகம் சுளித்தபடி விமானநிலைய நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தனர். இப்படிப்பட்ட மோசமான ‌வேலையினை செய்தது யார்என்பது குறித்து  விசாரணை நடத்தும்படி வங்கதேச சிவில் விமான போக்குவரத்து ஆணயத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.  தவறு செய்தவர்களுக்கு குறைந்தபட்சம்   இரு மாதங்கள்  தண்‌டனை நிச்சயம் என தெரியவந்துள்ளது. மேலும் விமான நிலைய ஊழியர்கள் செய்திருந்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ameer - labbaikudikadu,இந்தியா
21-டிச-201011:20:28 IST Report Abuse
ameer விமான நிலையத்தில் ஆபாச படம் விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு
Rate this:
Share this comment
Cancel
ஜெயக்குமார் - ஸ்ரீவில்லிபுத்தூர்,இந்தியா
20-டிச-201019:02:56 IST Report Abuse
ஜெயக்குமார் பயணிகள் இன்ப அதிர்ச்சினு போடுங்க..
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
20-டிச-201012:16:35 IST Report Abuse
christ எங்க ஊருக்கு வாங்க தெரு போஸ்டரெல்லாம் இதை விட அசிங்கமாக கைல அரிவல்லோடு கதாநாயகன் நிக்கிற மாதிரி, கதாநாயகி படுக்கை அரை காட்சி முகம் சுழிக்கிற மாதிரி எல்லாம் பாக்கலாம் !!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X