அரசியல் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ.,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார்

Updated : டிச 20, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (36)
Advertisement
சி.பி.ஐ.,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார்

சென்னை: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார். சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.


சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது: நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.ஐ., கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல் சட்டம் படித்தவன், சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வேன். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.நான் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளேன் விசாரணைக்கு வருவதாக கூறியிருக்கிறேன் என்றார்.

நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் நாளை ( செவ்வாய் கிழமை ) ஆஜராகலாம் என தெரிகிறது.


வழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.  


Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moorthy - jackson,யூ.எஸ்.ஏ
20-டிச-201023:47:16 IST Report Abuse
moorthy நான் ஒரு வக்கீல் சட்டம் படித்தவன். சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளும் எனக்கு தெரியும் . நான் பயப்பட தேவையில்லை .
Rate this:
Share this comment
Cancel
karthik - chennai,இந்தியா
20-டிச-201023:28:54 IST Report Abuse
karthik ஒன்றும் அறியாத கருணாநிதியின் குடும்பத்துக்கு ராஜா அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார்!!!!!!! இனிமேலும் ராஜாவை தி.மு.க வில் இருக்க விட்டால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என அஞ்சி கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்!!!!!!!
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
20-டிச-201023:15:40 IST Report Abuse
adalarasan முதலில் ஊழல் செய்து சொத்து ,பெனாமி உட்பட] செர்தவர்களிடமிருது பிடுங்கபடவேண்டும்!பிறகு குற்றம் செய்தவர்கள் கடும் தண்டனை பெற வேண்டும்!௬ மதத்திற்குள், கேஸ் முடியவேண்டும்! ஆடலரசன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X