பொது செய்தி

இந்தியா

"ஸ்பெக்ட்ரம் முறைகேடு: தரகர் நிராராடியாவிடம் சி.பி.ஐ., துருவி, துருவி விசாரணை

Updated : டிச 21, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (88)
Advertisement
CBI Grills NiraRadia, "ஸ்பெக்ட்ரம் முறைகேடு: தரகர் நிராராடியாவிடம் சி.பி.ஐ., துருவி, துருவி விசாரணை

 புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தனியார் கம்பெனிகளுக்கு வாங்கி கொடுப்பதில் தரகராக செயல்பட்ட நிராராடியாவை சி.பிஐ., அதிகாரிகள் துருவி, துருவி கேள்விக்கணைகள் தொடுத்து தேவையான விஷயங்களை பெற்று வருகின்றனர். டில்லியில் உள்ள இவரது வீட்டில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, நிரா ராடியாவுக்கும், சி.பிஐ., நேற்று (திங்கட்கிழமை ) சம்மன் அனுப்யியிருந்தது.

இன்று நிராராடியாவிடம் நேரடி விசாரணை நடத்தபப்ட்டது. நிரா ராடியா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடை தனியார் கம்பெனி்களுக்கு பெற்று கொடுப்பதில் முக்கிய தரகராக செயல்பட்டடார். என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் மத்திய அமைச்சர் ராஜாவுடன் பேசிய விவகாரம் ‌டேப் செய்யப்பட்டது. இதுவும் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரம் 15 ம் தேதி ராடியா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி ராடியா, தனது பெயரில் கம்பெனிகளை வாங்கி தனியாருக்கு விற்றுள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனால் இன்றைய விசாரணை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ள விவகாரம், நாட்டை உலுக்கியுள்ளது. முறைகேடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.கடந்த 8ம் தேதி டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. டில்லியில் உள்ள ராஜா அலுவலகம், தமிழகத்தில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், நண்பர்களின் அலுவலகங்கள், வீடுகள் என ஒரே நேரத்தில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சோதனை நடந்த ஒரு வாரத்திற்கு பின், இரண்டாவது முறையாக கடந்த வாரம் மீண்டும் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

டில்லியில் அரசியல் தரகர் நிரா ராடியாவுக்குச் சொந்தமான, "வைஷ்ணவி கம்யூனிகேஷன்' அலுவலகம், "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா ஏஜன்டுகள் அலோக் ஜெயின், மகேஷ் ஜெயின் வீடுகள், அலுவலகங்கள் என ஏழு இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, பெரம்பலூர், நெல்லை, விழுப்புரம் என 27 இடங்களிலும் காலையில் இருந்து மாலை வரை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்கள், விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் நேற்று, "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், சி.பி.ஐ., விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமையகத்தில் ஆஜரான பிரதீப் பைஜாலிடம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். விசாரணை மூன்றரை மணி நேரம் நடந்தது.

ராஜாவுக்கு சம்மன்: இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. ராஜா தற்போது சென்னையில் இருப்பதால், டில்லியில் அவர் வசிக்கும் வீட்டில் சம்மன் அளிக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை விதி 160 பிரிவின் கீழ், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகி, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கோரப்பட்டுள்ளார்.இதே போல், அரசியல் தரகர் நிரா ராடியாவுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் அடுத்ததாக விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

"முன்ஜாமீன் கேட்க மாட்டேன்' : "மாஜி' அமைச்சர் ராஜா பேட்டி :தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக, தற்போது சம்மன் அழைப்பு சி.பி.ஐ.,யால் தரப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.

அப்போது அவர் பதிலளித்ததாவது:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopal - chennai,இந்தியா
22-டிச-201009:13:35 IST Report Abuse
gopal வெரி ஆபத்தான aalu
Rate this:
Share this comment
Cancel
பார்த்திபன் - சென்னை,இந்தியா
22-டிச-201002:49:29 IST Report Abuse
பார்த்திபன் என்னாத்த துருவுனீங்க? நீரா வீட்டு தேங்காயையா? சுளையா புடிச்சு கூட குவாட்ரோச்சியை நீங்க ஒண்ணும் கிழிக்கலை. இங்கிலாந்து வங்கி கணக்கைக் கூட ரிலீஸ் பண்ணிட்டு நாடகமாடினீங்க. காங்கிரசுக்கு கமிஷன் போகாமலா தாமசையே மறுபடியும் ஊழல் தடுப்பு ஆணையரா போட்டிருக்காங்க? ஆக மொத்தம், நல்லா நாடகம் ஆடுறீங்க.
Rate this:
Share this comment
Cancel
ப.Kumar - kampala,உகான்டா
21-டிச-201023:36:25 IST Report Abuse
ப.Kumar மீண்டும் ஒரு முறை கலைஞர் katchi நிரூபித்துவிட்டது தாங்கள் அறிவியல் துணையுடன் எவ்வளவு பெரிய தொகையும் mudiyum என்று நன்றி rasa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X