அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்

Updated : டிச 25, 2010 | Added : டிச 23, 2010 | கருத்துகள் (60)
Share
Advertisement
""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று

""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.


தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.


காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.


- நமது நிருபர்கள் குழு -


Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனோகரன் - chennai,இந்தியா
28-டிச-201012:02:58 IST Report Abuse
மனோகரன் தம்பி ராகுல், நீ எப்படி நுனிப்புல் மேய்கிறாய் என்று நீயே உளறிகொட்டுகிறாய். நேற்று தான் கக்கன் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டு இருக்கிறாய். ஆனால் அதற்குள் ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. காமராஜரை பற்றி புஸ்தகத்திலிருந்து படித்தேன் என்கிறாய். அதில் உன் பாட்டி தான் அவரை அவமதித்து தூக்கி எறிந்தாள் என்று போட்டிருக்கிறதா? பல்கலைகழகமாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ்க்கு இன்று எல் கே ஜி வகுப்பு நடத்த டெல்லியில் இருந்து ஒரு கத்துக்குட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் இருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒரு காலத்தில் காமராஜர் "கிங் மேக்கர்" என்று அழைக்கபட்டார். டெல்லியின் தலைவர்களையே அவர் நியமித்தார். ஏன், இந்த ராகுலின் பாட்டி இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கியது இந்த காமராஜர். வெங்கடராமன், சுப்ரமணியம் போன்று இன்னும் எத்தனை தமிழ்நாட்டு தலைவர்கள். டெல்லி தலைமை தமிழ்நாட்டு காங்கிரஸ்யை பார்த்துகொண்டிருந்தது அந்த காலம். இன்றோ, அந்த நிலை மாறி, அங்கிருந்து வரும் ஒரு விவரம் தெரியாத பயலுக்கு சலாம் போட்டுகொண்டு நிற்கின்றனர். உண்மையில் வெட்கமாக இருக்கிறது.
Rate this:
Cancel
Dhananjayan - சென்னை,இந்தியா
25-டிச-201021:49:09 IST Report Abuse
Dhananjayan we are welcome for காங்கிரஸ்
Rate this:
Cancel
ivan - perambalur,இந்தியா
25-டிச-201018:42:12 IST Report Abuse
ivan ஒரே சட்டம், நதிநீர் இணைப்பு (முழு தீர்மானமாக நோ அப்பீல்) , ரிவர், lake dam எல்லோருக்கும் வேலை வாயப்பு, வெளிநாட்டு இம்போர்ட் எச்போர்ட் ரத்து, இடைத்தரகர் ஒழிப்பு, எல்லோருக்கும் civil ID , ரியல் எஸ்டேட் வியாபாரம் ரத்து, விவசாயிகள் நலன், சுத்தமான குடிநீர், நாட்டின் கனிவளம் காத்தல், குலம், குணம், கோயில், தோழமை, pazhamai கலாச்சாரம் காத்தல், வெளிநாட்டவர் வருகை கட்டுப்பாடு. வெளிநாட்டு கடன் பெராமை. இணக்கட்சிகளை களைந்து 2 அல்லது 3 கட்சி மட்டும் அங்கீகரித்தல். சுரண்டல், பதுக்கல், கொலை, கொள்ளை, பாலியல், பலாத்காரம், வன்முறையை தூண்டுதல், ஜாதிபெயரால் மக்களை இழிவு படுத்தல். மதத்தின் பெயரால் பொழைப்பு நடத்துபவர், அரசு/போலீஸ்/மிலிடரி/சிபிஐ/அத்வாகாடே/டாக்டர் போன்றோர் குற்றம்சைதால் என்று எல்லோரும்மும் ஒரே சட்டம், இழுத்து வச்சி அறுக்கணும். அப்பத்தான் நாடு உருப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X