அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை ஆட்டி வைப்பவன் அல்ல: முதல்வர் கருணாநிதி பேச்சு

Updated : டிச 25, 2010 | Added : டிச 23, 2010 | கருத்துகள் (72)
Share
Advertisement

சென்னை : மத்திய அரசை நான் ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல என்று கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார். முதல்வர் கருணாநிதி, கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி, நலத்திட்ட உதவிகள், புத்தாடைகள் வழங்கி பேசியதாவது: இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய போது, அதைப் பெறும் சமுதாயத்தினர் பெருமகிழ்ச்சி அடைவர் என நான் எண்ணியதுண்டு. ஆனால், இடஒதுக்கீடு கொடுத்ததை வேண்டாம் என, கிறிஸ்தவர்கள் சொன்ன காரணத்தைப் புரிந்து, அதை நான் ஏற்றுக்கொண்டேன். நீங்கள் கேட்டதையும் கொடுப்பேன்; நீங்கள் தந்ததையும் ஏற்றேன். நீங்கள் சொல்லும்படி நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக உள்ளது.


சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் அலட்சியப்படுத்த மாட்டோம். கிறிஸ்தவ சமுதாயத்துடன் நீண்ட கால தொடர்புண்டு. தி.மு.க.,வை வழி நடத்திச் சென்றவர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ராஜாஜி பிரீமியராக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தார். "தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக ராமசாமி நாயக்கரும், சோமசுந்தர பாரதியாரும் போராடுகின்றனர்' என ராஜாஜி கூறினார். இதற்கு பன்னீர்செல்வம், "எதிர்ப்பவர்கள் இருவர்; ஆனால், இந்தியை கொண்டு வருபவர் ஒருவர்; எதிர்ப்புக்கு மெஜாரிட்டி அதிகம்' என்றார். அவர் என்னோடு நெருக்கமாக இருந்தார். பீட்டர் காலத்தில் மட்டுமல்ல, பன்னீர் காலத்திலும் கிறிஸ்தவர்களுடன் எனக்கு நீண்ட தொடர்பு உண்டு என்பதற்கு இது உதாரணம். அந்த தொடர்பை அலட்சியமாகக் கருத மாட்டேன். இதை நம்பி தான் மூன்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.


"மத்திய அரசை ஆட்டி வைப்பவர்' என்று, என்னை பேராயர் சின்னப்பா கூறினார். நான் மத்திய அரசை ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல. நீங்கள் என்னை ஆட்டி வைக்கிற காõரணத்தால், ஆடத் தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் கிறிஸ்தவ பெரியவர்கள் ஆற்றிய தொண்டுகளை தி.மு.க., நன்றியுடன் நினைக்கும். சென்னை கடற்கரையில் கிறிஸ்தவ பெரியவர்களுக்கு சிலை வைக்கப்படடுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கால்டுவெல், நெல்லை மாவட்டத்தில் தங்கி 50 ஆண்டு தமிழுக்குத் தொண்டாற்றினார். அதை பாராட்ட, அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றுகிறோம். இதற்கான விழா, நெல்லையில் அடுத்த மாதம் நடக்கிறது.


ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், உரிமைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. பார்லிமென்டில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். காங்., துணையுடன் நிறைவேற்றி வைக்கப்படும். கோரிக்கையை நிறைவேற்ற போராடவும் தயங்க மாட்டேன். இதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். அரசு பொறுப்பில் இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும், இன்னொரு அரசின் தயவு வேண்டுமென்றால், அறிவை, அணுகுமுறையை பயன்படுத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இரண்டிலும் முடியாமல் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த வேண்டுமென்றால், அந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கவும் தயங்க மாட்டேன். கிறிஸ்தவ மக்களை போராட்டத்திற்கு கருணாநிதி அழைக்கிறார் என, பீட்டர் தவறாக கருதக்கூடாது. போராட்டத்திற்கு தலைமை வகிக்க, என்னை கிறிஸ்தவ மக்கள் தான் கேட்டுள்ளனர். நியாயத்திற்காக கடைசி வரை குரல் கொடுத்து, பழியை ஏற்று சிலுவையைச் சுமந்தார் ஏசு. அவரது திடகாத்திர உள்ளத்தையும், எதற்கும் பணியாத எதையும் தாங்கும் உள்ளத்தையும் பெற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார். விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், பேராயர் சின்னப்பா, எஸ்ரா சற்குணம் மற்றும் வின்சென்ட் சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajapermbalur - Chennai,இந்தியா
31-டிச-201013:37:23 IST Report Abuse
Rajapermbalur வீட்டுக்குள் வாழ வந்தால் ஆட்டி வைக்க ஆசை படலாம் . திருட வந்தால் பம்ம வேண்டும் .
Rate this:
Cancel
cx - xcz,இந்தியா
27-டிச-201013:58:10 IST Report Abuse
cx பீட்டர் என்பவர் இயேசுவின் சீடர்.
Rate this:
Cancel
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
25-டிச-201020:02:37 IST Report Abuse
கே.ஜீவிதன் ஆட்டி வைக்காமலா, வேண்டிய துறைகளையும், மந்திரி பதவிகளையும் வாங்கினீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X