அரசியல் செய்தி

தமிழ்நாடு

2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்

Added : டிச 31, 2010 | கருத்துகள் (199)
Share
Advertisement
2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்

திருக்கோவிலூர் : "எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்ரமணிய மஹாலில் நடந்த சட்டசபை தொகுதி பா.ம.க., நிர்வாகிகள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தான் பேசுவர். நான் மட்டும் உங்களை தேடி வருகிறேன். துடிப்பு மிக்க இளைஞர்களால் தான் சாதனைகளை நிகழ்த்த முடியும். அதனால் தான் கிளைக்கழக நிர்வாகிகள் இளைஞர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய செயலாளர் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றால் 10 பேரையாவது பார்த்து பெயர் சொல்லி அழைக்க வேண்டும். அந்த நிலை இல்லாததால் தான் நம் கட்சி பலகீனமாகி விட்டது. அதனால் தான் கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் 40 சதவீதம் பேர் உள்ள இளைஞர்களை நம் கட்சியில் வசப்பட வைக்க வேண்டும். தமிழகத்தை இதுவரை 30 முதல்வர்கள் ஆண்டுள்ளனர். இதில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஆள வில்லை. நம் சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பா.ம.க.,வில் இணைந்து, மாம்பழத்திற்கு ஓட்டு போட்டால் நாம் தான் தமிழகத்தை ஆள்பவராக இருப்போம்.


திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் நம்மவர்கள். இவர்கள் ஓட்டு போட்டாலே நாம் படுத்துக் கொண்டே ஜெயித்து விடலாம். அந்த மாதிரி நிலையை நம் கட்சிக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில் 100 எம்.எல்.ஏ.,வை தனித்தே பெறமுடியும். அடிக்கடி ஏன் கூட்டணி மாறுகிறீர்கள் என கேள்வி கேட்கின்றனர். 1967ல் இருந்து இன்று வரை தி.மு.க.,- அ.தி.மு.க., எந்த கூட்டணியிலும் சேராமல் எத்தனை முறை போட்டியிட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி மாறாத கட்சி எது என்று கூறமுடியுமா?


தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தேர்தலில் நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒரே தீர்மானத்தை போடச் சொல்லுங்கள். அதில் பா.ம.க., முதல் கையெழுத்தாக போடும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் யாரும் இதற்கு தயாராக இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க., 9 இடங்களில் வெற்றி பெற்றது. நாம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க., வினர் காசுக்கு விலை போய் விட்டனர். அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் 6 இடங்களிலாவது வெற்றி பெற்றிருப்போம். அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூட்டணி அமைக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். கூட்டணி குறித்து தை மாதத்திற்கு பிறகு சொல்வோம். எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். அப்பொழுது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வந்துவிடும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - texas,யூ.எஸ்.ஏ
01-ஜன-201103:06:03 IST Report Abuse
kannan அடே என் தங்கமே ரமா, ஒனக்கு மட்டும் எப்படிராஜா காமெடி எப்படி வருது. உன்னைய 1998 இல் ஒரு மீட்டிங்ல பாத்தேன். அப்பா சாமி அப்போ எனக்கு இந்த மாதிரி கண்ணை கட்டல சாமி. அப்போ நீ சொன்ன ஜாதிகள் இல்லையடி பாப்பா , குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம். எப்ப சொல்லற வன்னியன் தான் நாட்டை ஆலளும்னு. கண்ணா மக்கள் பாவமட ராசா. எப்படி தாண்ட முன்னாடி எவனோ உசுபேத்தி விட்டு ஆட்சி புடிச்சி இப்ப உலக பணக்காரன் no.1 ஆனான். சனங்க தாங்காது வேணாம்டா இராமா.
Rate this:
Cancel
singam - doha,கத்தார்
01-ஜன-201101:41:31 IST Report Abuse
singam அண்ணே ராமதாசு உன்ன்மைலே உன்னே பாராட்டனும் ஏன் தெரியுமா 2010 போகுதேன்னு சோகத்துல இருக்கறவங்களுக்கு உன்னாலே ஒரு கிச்சுகிச்சு இந்த ஒரு வருசத்துக்கு இந்த காமெடி போதும் வடிவேலு நீங்க கொஞ்சம் ஜாக்கிரத போட்டிக்கு ஒரு காமெடியன் வறாரு உஷார் உஷார் உஷார் .
Rate this:
Cancel
vanniyar - banlore,இந்தியா
01-ஜன-201100:53:02 IST Report Abuse
vanniyar அய்யா உங்களுக்கு எல்லாம் நல்ல தெரிகிறது அனால் ஏன் இந்த admk கூட கூட்டணி வைசெங்க அதன் எங்கள போருதுகுக முடியல நம் இந்த தமிழ் நாட்டை அல்வர்துகு முழு திறமை இருக்கு அய்யா டாக்டர் ராமதாஸ் அவைகளே உங்களால் தன நான் இன்னக்கு படித்து இருக்கேன் நீங்கள் இல்ல ந என்ன அவது நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஓகே தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X