அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னிய முதல்வர் : ராமதாஸ் ஏக்கம்

Updated : ஜன 08, 2011 | Added : ஜன 07, 2011 | கருத்துகள் (70)
Share
Advertisement

மயிலம் : 2.5 கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட முதல்வராக வரமுடியவில்லை என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதி பா.ம.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் ரெட்டணை கிராமத்தில் நேற்று மாலை நடந்தது. மாநில தலைவர் ஜி.கே மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடந்து வருகிறது. மயிலம் சட்டசபை தொகுதியில் பா.ம.க.,விற்கு 269 கிளைகள் உள்ளது. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும். நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். இது வரையில் வன்னியர்கள் முதல்வர்களாக வர முடியவில்லை.


வரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சியினர் ஒரு ஒட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரடம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தினமும் நிர்வாகிகள் ஒன்றுகூடி அரசியல் நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், கிராமத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., ஆதரவில்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வரும் பொங்கலுக்குப் பிறகு தான் பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். பா.ம.க., உள்ள கூட்டணி தான் அதிக இடங்களை வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Rajamohan - Mannargudi,இந்தியா
08-ஜன-201116:26:13 IST Report Abuse
Krishnan Rajamohan he is dreaming to become his son to the post of cm what is wrong with him every politician in the india is in the same sense no body bother about the nation or the people . we should be careful while electing leader it is our duty to elect good leader but no one seen good leader all are as bharathi told nenjil uramuminri nermai thiranuminri vanjanai seyvarodi kiliye ivar vaisollil veeraradi we will wait up to a good patriot leader comes and save this nation from these kind politicians
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
08-ஜன-201114:19:31 IST Report Abuse
Anand DEAR DR. ராமதாஸ் எப்போ ஜாதி அரசியல் ஒழியுமோ அப்போ தான் நீயும் உன் கட்சியும் உருப்படும்..
Rate this:
Share this comment
Cancel
Ghillit Ghilli - phoenix,யூ.எஸ்.ஏ
08-ஜன-201108:35:35 IST Report Abuse
Ghillit Ghilli நன்றி ராமதாஸ் அய்யா, உங்க தினம் ஒரு காமெடிக்கு! இந்த நாள் காமெடி நாள் வழங்கியவர் மருத்துவர் அய்யா!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X