வாழ்க்கையின் வழிகாட்டியாக திருக்குறள்: அப்துல் கலாம்

Updated : ஜன 09, 2011 | Added : ஜன 07, 2011 | கருத்துகள் (13) | |
Advertisement
ராமேஸ்வரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம்.

ராமேஸ்வரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.


வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன்.அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (13)

senthil - thirupur,இந்தியா
09-ஜன-201112:37:18 IST Report Abuse
senthil HE IS A GENIOUS.SO I ACCEPT HIS WORDS
Rate this:
Cancel
rangaramanathan - coimbatore,இந்தியா
08-ஜன-201116:43:43 IST Report Abuse
rangaramanathan எளிமையான கலாம் அவர்கள் ஜனாதிபதியாக வேண்டும் என முடிவு செய்தது வாஜ்பாயி தலைமியிலான அரசு. எதிர்ப்பு செய்தது சோனியாவின் காங்கிரஸ் கட்சி. இவர்களும் ஒரு ஜனாதிபதியை தேர்ந்து எடுத்துள்ளார்கள், ஆமாம் அவர் பெயர் என்ன?
Rate this:
Cancel
bala - Bangalore ,இந்தியா
08-ஜன-201116:27:36 IST Report Abuse
bala மனம் வேதனை படுகிறது என்ன சொல்ல ப்ளீஸ் விடுங்கள் அவராவது நேர்மையா மாணவமணிகளுக்கு சேவை செய்யடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X