ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

Added : ஜன 10, 2011 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி : தொலைத்தொடர்பு துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கும், 11 கம்பெனிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் பதவிக் காலத்தில், வழங்கப்பட்ட "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:11 கம்பெனிகள்: "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அத்துடன் லைசென்ஸ் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் லைசென்ஸ்களை பூர்த்தி செய்யாத, எடிசாலட், யுனிநார், லூப் டெலிகாம், வீடியோகான், எஸ்-டெல், அலையன்ஸ் இன்பிரா, ஐடியா செல்லுலார், டாடா டெலி சர்வீசஸ், சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீசஸ், டிஷ்நெட் ஒயர்லெஸ் மற்றும் வோடபோன் எஸ்ஸார் ஆகிய 11 கம்பெனிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.இந்த வழக்கில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தையும் (டிராய்) ஒரு பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிடுகிறோம். நோட்டீஸ் பெற்றவர்கள் அனைவரும் மூன்று வார காலத்திற்குள் தங்களின் பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி, மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு "டிராய்' அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பல கம்பெனிகள் தங்களின் கடமையை பூர்த்தி செய்யவில்லை.உத்தரவாதம் அளித்தபடி, தொலைத்தொடர்பு சேவைகளை துவக்கவில்லை.


அதனால், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது விசாரணைக்கு உகந்தது என்றே கருதுகிறோம்.ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பல கம்பெனிகள், அரசுக்கு உத்தரவாதம் அளித்தபடி தங்களின் கடமைகளை நிறைவேற்றாத போதும், தொலைத்தொடர்பு துறையின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான "டிராய்' ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வருடம், ஏழு மாதங்களாக மவுனமாக இருந்தது ஏன்? நுகர்வோரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அது செய்தது என்ன?அரசுக்கு உத்தரவாதம் அளித்தபடி, தங்களின் கடமைகளை நிறைவேற்றாத கம்பெனிகள் எவை, எவை என்பதை சுப்பிரமணியசாமியும் தெரிவிக்க வேண்டும். அதன்பின் அவரின் மனு மீதான முழு விசாரணை நடைபெறும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


மனு செய்தவர்கள் யார்? தொலைத்தொடர்பு துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த போது, 2008 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் தகுதியற்ற பல ஆபரேட்டர்களுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க, "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை லைசென்ஸ் வழங்கப்பட்டதால், அவற்றை ரத்து செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு பொதுநலன் கோரும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.ஒரு மனுவை டில்லியை சேர்ந்த பொதுநல வழக்குகள் மையம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும், மற்றொரு மனுவை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் தாக்கல் செய்தனர்.சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் லிங்டோ, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோபாலசாமி ஆகியோரும், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணைய முன்னாள் தலைவர் சங்கரும் மனுதாரர்களாக இடம் பெற்றுள்ளனர்.


"கபிலின் கருத்தை ஏற்க முடியாது' : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது' என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள முடியாது. அந்த கருத்தை ஏற்க முடியாது. அது ஆவணத்தின் ஒரு பகுதியாகாது.விதிமுறைகளை மீறி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை அரசு தெளிவாக வெளியிட வேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்பட்டது நாங்களும் அரசை கேட்போம். 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஆனால், அரசு அதை மறுக்கிறது. அரசு தரப்பில் கூறப்படும் தகவல் வேறு விதமாக உள்ளது. அதனால், எவ்வளவு இழப்பு என்பது தற்போது விவாதத்திற்குரிய விஷயமாகியுள்ளது என்றும் நீதிபதிகள் கூறினார்.இதற்கிடையில், மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை' என, அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தது, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணையில் குறுக்கிடுவது போன்றது.இவ்வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. அமைச்சரின் கருத்து, சி.பி.ஐ., விசாரணையை திசை திருப்பும் செயல். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கும் கட்டுப்படாத செயல். நீதிமன்ற அவமதிப்பாகும்.இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Subramanianaar - Chennai,இந்தியா
11-ஜன-201120:39:36 IST Report Abuse
Bala Subramanianaar 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.. அந்த இழப்பை ஏற்ப்படுத்த ஆதாயம் தேடியவர்கள் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்., இது என்னால், உங்களால் முடியாத ஒன்று., நம்மால் முடியும்... ஜனநாயகம் இன்னும் உயிருடன் இருப்பதை உச்சநீதிமன்ற நடவடிக்கை உணர்த்துகிறது.. அந்த மிகபெரிய தூணுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்... திரு.கபில் சிபல் அவர்களது கருத்து முற்றிலும் ஏற்புடையதல்ல... 2000 இல் 100 ரூபாய்க்கு விற்ற எந்த பொருள் இன்னும் அதே 100 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது..?? இவர்களெல்லாம் படித்தவர்கள் என்பதை நினைக்கும் பொது.............!!!!!!!!????????? CAG அவர்கள், தான் சமர்பித்த ஆவணம் 100 % உண்மை என்று அடித்து சொல்லிவிட்டார்.,., (பாராட்டுக்கள்) ஆனால், எங்கோ இருக்கும் கரும்புள்ளியை மறைக்க பார்க்கிறார்கள் தவறு செய்தவர்களும், செய்வதை பார்த்து கொண்டிருந்தவர்களும்... ராஜினாமா என்பது எந்த சட்டத்தின் தண்டனை என்பது இன்னும் புலப்படவில்லை...??? தவறு செய்தவர்கள் ராஜினாமா செய்வது - தண்டனை என்றால், நாட்டில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ..!!?? JPC - நாடாளுமன்ற கூட்டு குழு என்ற ஒன்று அமையபெறாத வரை இந்த உண்மை வெளிவரபோவதில்லை..... இந்தியனாய் இருந்துகொண்டு என்னால் என்ன செய்ய முடியும்..???? வேடிக்கை பார்ப்பதை தவிர...!!!???
Rate this:
Cancel
Suresh J - cbe,இந்தியா
11-ஜன-201120:12:35 IST Report Abuse
Suresh J வணக்கம். வாழ்க ஜனநாயகம்.வளர்க பணநாயகம்
Rate this:
Cancel
Rajesh Michele - Coimbatore,இந்தியா
11-ஜன-201117:07:28 IST Report Abuse
Rajesh Michele இந்திய நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அறுதல் அளித்தாலும் ஸ்பெக்ட்ரம், காமன்வீல்த், ஆதர்ஷ் போன்ற மாபெரும் ஊழல்களின் முடிவுகள் நிச்சயமாக குற்றவாளிகளுக்குதான் சாதகமாக இருக்கும். மிகப்பெரும் ஊழல் குற்றவாளிகளுக்கு மக்கள் தங்கள் வாக்குகளின் மூலமே அவர்களை தண்டிக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X