பதிவு செய்த நாள் :
'நாடு திரும்பும் எண்ணம் இல்லை!' :
மல்லையாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி: 'வெளிநாட்டுக்கு தப்பியுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, நாடு திரும்பும் எண்ணம் இல்லை' என்று கூறியுள்ள, டில்லி கோர்ட், அவருக்கு எதிராக, மேலும், ஒரு பிடிவாரன்டை பிறப்பித்து உள்ளது.

'நாடு திரும்பும் எண்ணம் இல்லை!' : மல்லையாவுக்கு கோர்ட் கண்டனம்

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மீது, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள் ளதாக,பல்வேறு வங்கிகள் வழக்குதொடர்ந்தன.

அதை தொடர்ந்து, மல்லையா, பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றான். அவன் மீது, நாட்டின் பல்வேறு கோர்ட்டுகளில்

வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், டில்லி விமான நிலைய சேவையை பயன்படுத்தியதற்காக, மல்லையா வின் விமான நிறுவனம் அளித்த, 7.5 கோடி ரூபாய்க்கான செக், பணம் இல்லாமல் திரும்பியது தொடர்பானசெக் மோசடி வழக்கு, டில்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி, கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது; பிடிவாரன்ட் பிறப் பிக்கப்பட்டிருந்தது. அப்போது, 'நாடு திரும்ப தயாராக உள்ளேன்; ஆனால், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது' என, விஜய் மல்லையா சார்பில் தெரிவிக் கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட் சுமித் ஆனந்த் கூறியதாவது:

விஜய் மல்லையாவுக்கு, உண்மையில் நாடு திரும்பும் எண்ணம் எதுவுமில்லை; நீதித் துறையின்

Advertisement

மீது, அவருக்கு எந்த மதிப்பும் இல்லை.'நாடு திரும்ப விரும்புவதாகவும்; ஆனால், பாஸ் போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ள தாகவும்' அவர் கூறியுள்ளது,கோர்ட் நடைமுறையை அவ மதிக்கும் நோக்கத்தில் கூறப்பட்ட பொய் யான தகவல்.இவ்வாறு மாஜிஸ்திரேட் கூறினார்.

மேலும், மல்லையாவுக்கு எதிரான மற்றொரு பிடிவாரன்டையும் அவர் பிறப்பித்தார். அதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை, 2017 பிப்., 4க்கு தள்ளி வைக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
05-நவ-201618:17:27 IST Report Abuse

CHANDRA GUPTHANஇந்தாளு நாடே திரும்ப வேண்டாம் . அடித்த கொள்ளை பணத்தை மட்டும் இந்தியாவிடம் திரும்ப தர சொல்லு . காட்டி,/ கூட்டி கொடுக்கும் காங். thane இந்தாளுக்கு M.P. பதவி கொடுத்தது . எதுக்காக ? ப .சியின் மேற்பார்வையில் அன்னை மணிமேகலையின் கொள்ளை பணத்தை வெளுக்க தான் . பணம் வெளுத்தது இவன் சாயமும் வெளுத்தது . எப்படியோ பலரின் கொள்ளை பணம் காப்பாற்றப்பட்டது . நல்லா இருங்க

Rate this:
Balaji - Khaithan,குவைத்
05-நவ-201614:23:35 IST Report Abuse

Balajiஅவன் மீது எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ள போவதில்லை..... இவனது பிரச்சனைகளில் உள்ள பரபரப்பு அடங்கியவுடன் ஏற்கனவே பலரது கடனை தள்ளுபடி செய்ததை போல அவனது கடனையும் தள்ளுபடி செய்துவிட்டு மத்திய அரசு சாதாரண மக்கள் தலையில் வேறு என்ன வரி போடலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடும்..... எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டு இருக்கிறது.......

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
05-நவ-201613:49:16 IST Report Abuse

Ramaswamy Sundaram9000 கோடி சுருட்டின நாதாரி மல்லையாவையும் புடிக்க முடியல....1.80 லட்சம் கோடி அடித்தவரையும் பிடிக்க முடியலை....நாற்றம் எடுக்குது இந்திய நீதியும் சட்டங்களும்

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X