பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை

Added : ஜன 20, 2011 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். "சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது.
பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை

புதுடில்லி : காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். "சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது.

மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது' எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.

இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.

இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், "பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்' என்றார்.

குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

பண்டிட்டுகள் அகதிகள் : காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - london,யுனைடெட் கிங்டம்
20-ஜன-201120:14:01 IST Report Abuse
kundalakesi பாகிஸ்தான் என்ற வார்த்தையை சொல்லவே அனைத்து நாட்டினரும் கூச்சபடுவர், அந்தளவு பெயரேடுத்துள்ளனர். ஆனால் இங்குள்ள சில தேச துரோகிகள்,பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிகொண்டு சிறுபான்மை, அது இது என்று பேசி திரிகின்றனர், மத சார்பற்ற நாட்டில் ஏது சிறுபான்மை, பெரும்பான்மை , வலிமை வாய்ந்த நம் ராணுவத்தால் காஷ்மீர் தீவிரவாதிகளை சுட்டு தள்ள வேண்டும் , நம் நாட்டின் ஒரு மாநிலத்தில் , நம் தேசிய கொடியை ஏற்றாமல், தடுப்பவன் எவனாயிருந்தாலும் ,அவன் தேச துரோகிதான் , காஷ்மீருக்கு அளவில்லாத சலுகைகள் வழங்கபட்டுள்ளது. மேலும் மேலும் அவர்களை தாலாட்டுவது ,பாம்பிற்கு பால் வார்ப்பது போல தான் ,தீவிரவாதிகளை ,தீவிர நடவடிக்கை மூலம் தான் கட்டு படுத்த வேண்டும் .இஸ்ரேல் என்ற குட்டி நாட்டின் பெயரை கேட்டாலே, இஸ்ரேலை சுற்றி உள்ள அண்டை நாடுகளுக்கு ஜன்னி,பேதி எல்லாம் ஒரு சேர வரும். ஏனெனில் இஸ்ரேலை தொட்டாலே அடி விழாது ,மரண அடி விழும் , அவன் கன்னத்தில் அறைந்தால் , அறைந்தவனின் கையை வெட்டிவிடுவான் , ஆனால் இந்தியாவிலோ சிறுபான்மை ஒட்டு போய்விடும் என்ற பயத்தில் காங்கிரஸ் அரசு ஆரம்பம் முதலே தீவிரவாதத்தை ஒடுக்க முயலாமல் , தீவிரவாத கூட்டத்துக்கு சலுகைகளை அள்ளி விடுகிறது , காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற வருபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நிச்சயமாக மத்திய அரசின் கடமை. காஷ்மீரில் குடியரசு தினத்தன்று ஓமர் கொடியேற்றினால் ,ஏன் பா ஜ க வினர் போகின்றனர் , இஸ்ரேலை பார்த்து கற்றுகொள்ளுங்கள். தீவிர வாதத்தை எப்படி ஒடுக்க வேண்டுமென்று ??
Rate this:
Cancel
Peer Advo - tirunelveli,இந்தியா
20-ஜன-201118:00:16 IST Report Abuse
Peer Advo ஓமர் இந்தியன் அல்லது பாகிஸ்தான் பிரஜை என்பது சமாச்சாரம் இல்லை. பிஜேபி யாத்திரை தான் பிரச்சனை. ஒரு முதல்வர் தான் ஆளும் பகுதியில் எழும் குளறுபடிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காக்க நடவடிக்கை கோருவது (இந்திய உள்துறையில் ) கொஞ்சம் நம்மவாளுக்கு பிடிக்காது? இது நடைமுறை கருத்து சொல்லுங்க. காஷ்மீர் வரலாறு என்னே என்றும் கேட்டு படிங்க
Rate this:
Cancel
.V.R..V.senthil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201110:23:59 IST Report Abuse
.V.R..V.senthil தேச அவமானம் நமது நாட்டில் நமது தேசிய கொடியை ஏற்றுவதற்கு பயம். காங்கிரஸ் ஒரு வேலை செய்யலாம், காஸ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்கலாம். இப்படி ஒரு அவமானமான நிலையை நீங்கள் உருவாகியதற்கு. பாராட்டுகிறேன் பிஜேபி செயலுக்கு. வந்தேமாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X