தமிழ்நாடு

ஜெ . மீதான பிறந்த நாள் பரிசு வழக்கு தள்ளி வைப்பு

Updated : ஜன 20, 2011 | Added : ஜன 20, 2011
Share
Advertisement

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான பிறந்த நாள் பரிசு வழக்கை, வரும் 31ம் தேதிக்கு சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தள்ளிவைத்துள்ளது.தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 1992ம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி, இரண்டு கோடி ரூபாய்க்கு டி.டி.,க்கள் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. உடந்தையாக இருந்ததாக, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீதும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் உள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.ஜெயலலிதா சார்பில் வக்கீல் வெங்கடேஷ், செங்கோட்டையன் தரப்பில் வக்கீல் வி.எஸ்.சுந்தர், அழகு திருநாவுக்கரசு சார்பில் வக்கீல் குமார் ஆஜராகினர். பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜராகும் வக்கீல் நவநீதகிருஷ்ணன் சென்றிருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என வக்கீல் வெங்கடேஷ் கோரினார். இதற்கு சி.பி.ஐ., தரப்பு சிறப்பு வக்கீல் என்.ஆர்.இளங்கோ எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து, விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிபதி பழனிச்சாமி தள்ளிவைத்தார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X