தமிழ்நாடு

வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்

Updated : ஜன 20, 2011 | Added : ஜன 20, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய ஞான சபை சார்பில் வள்ளலார் ஜோதி தரிசனம் தைப்பூசத்தை முன்னிட்டு நடந்தது. 7 திரை நீக்கி ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜோதி தரிசனத்தினை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை காலை வரை 6 தடவை ஜோதியை தரிசிக்க பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , இந்து ‌அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.R.Rajhendhiran - pondicherry,இந்தியா
20-ஜன-201112:01:23 IST Report Abuse
K.R.Rajhendhiran 1723 ஆம் ஆண்டு புகழோடு தோன்றி 1774 ஆம் ஆண்டு பஞ்ச பூதங்களோடு இரண்டறக் கலந்து இன்றும் உலக மாந்தர்களின் மனப்பிணியோடு பசிப்பிணியையும் விரட்டி நூறாண்டு கடந்தும் இன்னும் அணையா அடுப்போடு ''அருட்பெரும் ஜோதி'' யையும் ''தனிப்பெரும் கருணையோடு'' நமக்கெல்லாம் தந்த தந்தை வள்ளலாரின் மலர் பதம் நினைந்து பணிந்திடும் இவ்வேளை ஒன்று சொல்லியே ஆகவேண்டும் உலகின் எல்லா மூலையிலும் பசித்தவன் மண்டியிட பணம் படைத்தவன் அன்னமிடல் இயற்கை ; ஆனால் வடலூரிலோ இன்று(ம்) பார்க்கலாம் பசித்தவன் பதறி போதும் போதும் என்றோட படைத்தவர்கள் (அன்னமும் பணமும் ) அவர் பின்னே சென்றிறைஞ்சி ''ஒரு பிடி அன்னம் உண்ணென'' வேண்டிக் கேட்பது வேடிக்கை இல்லாத வாடிக்கை ''தாயின் அன்னக்கை கெஞ்சலுக்கு தப்பி ஓடி விளையாடும் சின்னக்கை சிசுவின்'' செய்கையை ஒப்பதோ இது' என தோன்றும்.மாண்பு.. வாழ்க வள்ளல் பெருமான்- வளர்க அன்னம் பாவிக்கும் பண்பு- அன்புடன் K .R .ராஜேந்திரன் - R .அங்காள புவனேஸ்வரி, பாண்டிச்சேரி - 8 .
Rate this:
Cancel
Balamurali Arumugam - Salem,இந்தியா
20-ஜன-201109:11:14 IST Report Abuse
Balamurali Arumugam அருட்பெருஞ்சோதி!!! அருட்பெருஞ்சோதி!!! தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி!!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X