அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன்?சட்டசபை தேர்தல் காரணம்

Added : ஜன 20, 2011 | கருத்துகள் (11)
Share
Advertisement
அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன்?சட்டசபை தேர்தல் காரணம்

மத்திய அமைச்சரவையில் நடைபெற்ற மாற்றத்தின்போது, தானாகவே முன்வந்து, அமைச்சர் பதவி இப்போதைக்கு வேண்டாமென தி.மு.க., கூறிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை ஒட்டிய காரணங்களுக்காகவே இந்த அமைச்சரவை மாற்றத்தில், தி.மு.க., பங்கேற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.


மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம், நேற்று முன்தினம் நடைபெற்றது. தொலைத்தொடர்பு இலாகா அமைச்சராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா பதவி விலகியதை அடுத்து, அந்த கட்சிக்கான ஒரு கேபினட் பதவி, மத்திய கூட்டணியில் காலியாக இருந்தது. இதனால், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால், ராஜா இருந்த கேபினட் பதவிக்கு பதிலாக, ஒரு அமைச்சர் பதவி, தி.மு.க.,வுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றத்தின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த யாரும் புதிதாக பதவியேற்றுக் கொள்ளவில்லை. அதேபோல, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பண்டோபாத்யா அமைச்சர் பதவியை ஏற்பார் என்றும் கூறப்பட்டது; அதுவும் நடக்கவில்லை. மத்திய கூட்டணியின் முக்கிய கட்சிகளான தி.மு.க.,வும் திரிணமுலும் ஏன் பதவி ஏற்கவில்லை என்ற கேள்வி அப்போதே எழுந்தது.


இந்த சூழ்நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும், விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் தி.மு.க.,வுடனும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசுடனும் கூட்டணி வைத்து, காங்கிரஸ் போட்டியிடப் போகிறது. எனவே, அந்த கட்சிகளை திருப்திபடுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு உள்ளது. எனவே, தங்கள் கட்சிகளின் சார்பில் யாரை அமைச்சர்களாக ஆக்குகிறீர்கள் என்பது பற்றி தெரிவியுங்கள் என, இந்த கட்சிகளுக்கு காங்கிரசிடம் இருந்து முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ராஜாவை பதவி விலக வைத்தபோதே, அவரது இடம் காலியாக இருப்பதால், தி.மு.க., கோட்டாவை நிரப்ப காங்கிரஸ் தயாராக இருந்தது. தவிர, தொலைத் தொடர்பு இலாகா சர்ச்சையில் சிக்கியிருப்பதால் அந்த இலாகாவை மறுபடியும் கேட்பதை மட்டும் தவிர்த்துவிட்டு வேறு இலாகா கேட்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்கவில்லை.


இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய தகவலில், இப்போதைக்கு அமைச்சரவை மாற்றத்தில் பங்கேற்பதில்லை என்றும் பங்கேற்பது குறித்து பிறகு முடிவு செய்து தெரிவிக்கிறோம் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. திரிணமுல் காங்கிரசும் இதே முடிவை காங்கிரசுக்கு தெரிவித்துவிட்டதாக கூறப் படுகிறது. இதற்கு காரணம், விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களின் போது காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 80 அல்லது 90 தொகுதிகள் என்றெல்லாம் கூட காங்கிரசார் அதிகமாக ஆசைப்பட ஆரம்பித்துள்ளதை தி.மு.க., நன்றாக உணர்ந்துள்ளது. எனவே, மத்தியில் அமைச்சர் பதவி ஏற்பது என்பது இப்போதைய சூழ்நிலையில் அவசியம் இல்லாத ஒன்று. இப்போதைக்கு மத்தியில் கிடைக்கும் வாய்ப்பை ஏற்காததன் மூலம் சட்டசபைத் தேர்தலின்போது பேசப்படும் பேரத்தின் கடுமையை குறைக்க முடியும்.


தொகுதிகளை அளிப்பதில் பிடிவாதம் காட்ட காங்கிரசை அனுமதித்துவிட கூடாது என்றும் தி.மு.க., நினைக்கிறது. எனவே, அமைச்சர் பதவி வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் தி.மு.க., முடிவு செய்து விட்டது. பிரதமர் அளித்த பேட்டியில் கூட, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரியில் ஆரம்பித்து மே மாதம் வரை நடைபெறும். தமிழக சட்டசபை தேர்தல் அப்போது முடிந்தே விட்டிருக்கும். தமிழக அரசியல் நிலைமைகள் தெளிவாகிவிடும். எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகே, மத்தியில் அமைச்சரவை மாற்றம் நடைபெறப்போகிறது. அந்த சூழ்நிலையில், அமைச்சர் பதவியை ஏற்பது குறித்து தெளிவான முடிவெடுக்க, தி.மு.க.,வுக்கு மிகுந்த வசதியாகவும் இருக்கும். எனவே தான், இப்போது நடைபெற்று முடிந்த மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களை நேற்று சந்தித்த அம்பிகா சோனி, "நேற்று (நேற்று முன்தினம்) நடந்தது பெரிய அளவிலான மாற்றம் அல்ல; இலாகாக்கள் மட்டுமே மாற்றப்பட்டன. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், கூட்டணி கட்சிகள் சம்பந்தப்பட்ட மாற்றமாக அமையவில்லை' என்றார்.


எல்லாமே தேர்தல் கணக்கு: அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள உ.பி., மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் மற்றும் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், கேபினட் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த தலைவரான பெனி பிரசாத் வர்மா, தனிப் பொறுப்புடன், உருக்குத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஏற்கனவே இணை அமைச்சர்களாக ஜிதின் பிரசாத், பிரதீப் ஜெயின், ஆர்.பி.என்.சிங் உள்ளனர். உ.பி.,யில் காங்கிரசுக்கு உள்ள எம்.பி.,க்கள் எண்ணிக்கை 22. இதுவரை அமைச்சர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருந்தது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின் ஆறாக உயர்ந்துள்ளது.


ஆந்திராவில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டிக்கு முக்கிய இலாகாவான பெட்ரோலியத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ராம் ரமேஷ், மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். ஆந்திராவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சமாக 32 எம்.பி.,க்கள் உள்ளனர். இருந்தும் ஒரு கேபினட் பதவிதான் கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை வலுத்துள்ள நிலையிலும், ஜெகன் மோகன் ரெட்டி தனி கட்சி துவக்கவுள்ள நிலையிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தெரிகிறது. கேரளாவில் பெரும்பான்மையாக உள்ள நாயர் பிரிவைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சராக உள்ள வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பாக சிவில் விமான போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கே.வி.தாமஸ், உணவு வினியோகத்துறை தனிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Kumar - chennai,இந்தியா
21-ஜன-201112:04:14 IST Report Abuse
M.Kumar This scientific corruptor wants Bharat Ratna post and assurance that he will be given status like Anna and MGR before he retires from Politics. only Sonia can do this.But in the people mind his name has been very much fed up since totally he is caring for his families........He should be shunted out at the earliest to get a Cleaner Tamilnadu.
Rate this:
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-ஜன-201117:23:17 IST Report Abuse
villupuram jeevithanYes, this scientific corruptor may want Bharat Ratna; but he is eligible to get only BHARATH KALANGAM....
Rate this:
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-ஜன-201111:44:30 IST Report Abuse
villupuram jeevithan மீசையில் மண் ஒட்டவில்லை.
Rate this:
Cancel
sandosh kumar - Delhi,இந்தியா
21-ஜன-201111:05:20 IST Report Abuse
sandosh kumar இந்த நிலை வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X