பொது செய்தி

இந்தியா

தேசியக் கொடி ஏற்றும் உரிமை:காஷ்மீர் பார்வையாளர் கருத்து

Added : ஜன 20, 2011 | கருத்துகள் (2)
Advertisement

ஜம்மு:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு என, காஷ்மீர் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய மத்திய அரசு பார்வையாளர்கள் சிலரை அனுப்பியுள்ளது. பத்திரிகையாளர் படோங்கர், ராதா குமார், எம்.எம்.அன்சாரி உள்பட ஐந்து பேர் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று அம்மக்களின் குறைகளை அறிந்து வருகின்றனர். தற்போது இந்த குழுவினர் ஜம்முவில் தங்கியுள்ளனர்.குடியரசு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து பார்வையாளர் குழுவின் தலைவர் படோங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. பாரதிய ஜனதா கட்சியை லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் வன்முறை குறித்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், பா.ஜ.,வின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.


காஷ்மீர் மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும், என ஆவல் கொண்டுள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து இம்மாநில மக்கள் இருவேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். இது குறித்து ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும்.காஷ்மீரை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிக்க இம்மாநில மக்கள் விரும்பவில்லை.


ஒன்று பட்ட காஷ்மீரை தான் விரும்புகின்றனர். பாகிஸ்தானிலிருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக சரக்குகளோ, மக்களோ வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது, என இம்மாநில மக்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு படோங்கர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalai yarasan - boonlay,சிங்கப்பூர்
21-ஜன-201116:18:20 IST Report Abuse
Kalai yarasan பாரத தாயின் தலையாக விளங்கும் பகுதி காஷ்மீர். அதில் ஒரு புறம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மறுபுறம் சீனா ஆக்கிரமிப்பு, என்றைக்குதான் இதற்கு விடியல் ஏற்படுமோ!!!! என்ன அரசு! என்ன ஆட்சி!! இந்தியாவின் செய்தி வாசிக்கப்படும்போது எல்லா நாட்டு மக்களும், நம் மக்களை எவ்வளவு கேவல படுத்துகிறார்கள் தெரியுமா!!!!
Rate this:
Share this comment
Cancel
sandu - kovai,இந்தியா
21-ஜன-201107:46:48 IST Report Abuse
sandu பாரதத்தின் பணம் வேண்டும், சலுகைகள் வேண்டும். ஆனால் தேசிய கொடி, விசுவாசம் மருந்துக்கும் வேண்டாம். ரொம்ப நல்லா இருக்கு காஸ்மீர் முதல்வரின் நடவடிக்கை. இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்கினால் தான் வருங்கால பாரதம் சிறப்புறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X