அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு: பொதுக்குழுவில் கருணாநிதி பேசியது என்ன?

Added : பிப் 03, 2011 | கருத்துகள் (41)
Share
Advertisement
பா.ம.க., கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு: பொதுக்குழுவில் கருணாநிதி பேசியது என்ன?

சென்னை : "" பா.ம.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே எதிர்ப்பு தெரிவித்தார்; நான் ராமதாசுடன் பேசிப் பார்க்கிறேன் என தெரிவித்தேன், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,'' என முதல்வர் கருணாநிதி, பொதுக்குழுவில் பேசியுள்ளார். இதன் மூலம், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசு ஏராளமான சாதனைகள் செய்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்; ரேஷனில் மளிகைப் பொருள் வழங்கும் திட்டம்; கலைஞர் காப்பீட்டு திட்டம்; 108 ஆம்புலன்ஸ்; திருமண உதவித் தொகை; இலவச சைக்கிள்; கலர் "டிவி', காஸ் ஸ்டவ், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றால், பொதுமக்களுக்கு நம் மீது மதிப்பு அதிகரித்துள்ளது. அரசின் திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் அனைவரும் நமக்குத்தான் ஓட்டளிப்பர். அதனால், இந்த தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டாலே எளிதில் வெற்றி பெறலாம். கூட்டணி கட்சிகள் நமக்கு ஆட்டம் காட்டுகின்றன. நாம் வெற்றி பெற நம் அரசின் சாதனைகளே போதும், "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் எல்லாம் பொதுமக்களிடம் எடுபடாது. அதனால், நாம் தனித்து போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.


இதற்கு முதல்வர் பதிலளித்து பேசியதாவது: கடந்த 77ல் நாம் அவ்வளவு சாதனைகள் செய்திருந்தும்; இவ்வளவு சீட்டுகள்தான் தர முடியும் என கூறுகின்ற இடத்தில் நாம் இருந்தும்; எமர்ஜென்சி இருந்த போதும்; இத்தனை ஊடகங்கள் இல்லாத நிலையிலேயே நாம் தோற்றுப் போனோம். அதனால், தனித்து போட்டி என்பதெல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு உதவாது. உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. கட்சிக்கு இப்போது சோதனையான காலம். நாம் அவற்றை முறியடிப்போம். நம்முடன் இருப்பவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். "டில்லியில், காங்கிரஸ் தலைவர்களுடனான பேச்சு மகிழ்ச்சி அளித்தது. சோனியாவும் மகிழ்வுடன் காணப்பட்டார். இடங்களை பகிர்ந்து கொள்ள நாமும் குழு அமைத்துள்ளோம். அவர்களும் குழு அமைத்துள்ளனர். இப்போதுள்ள கூட்டணி தொடர்கிறது.


பா.ம.க.,வைச் சேர்த்துக் கொள்வது குறித்து சோனியாவிடம் பேசினேன். "அப்போது அவர், எதிரிகளை கூட நாம் மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்க வேண்டுமா, அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? என்றார். நான் அவரிடம், ராமதாசின் குணத்தைப் பற்றி எடுத்துக் கூறி, அவரை நான் சமாதானப்படுத்திப் பார்க்கிறேன் என்றேன். ஆனால், அதற்கு அவர்கள் உடன்படாமல், ஒரு முறைக்கு நூறு முறை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசியதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர். முதல்வரின் இந்த பேச்சிற்கு பொதுக்குழுவில் பலத்த வரவேற்பும் கிடைத்தது.


மந்திரிக்கு எம்.பி., டோஸ்: ஒரு எம்.பி., பேசும் போது, "மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களையும் வரவேற்று அவர்களுக்கு உரிய பதவி கொடுத்து அவர்களுக்கு உரிய மரியாதை, கவுரவம் ஆகியவற்றை முதல்வர் அளித்து வருகிறார். ஆனால், அப்படி வருபவர்கள், பழைய ஆட்களை மதிப்பதில்லை. நான் ஒரு முறை அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்த அமைச்சரை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் என்னை சரியாக நடத்தவில்லை. நான் பேச வேண்டும் எனக் கூறியும், பிறகு பேசுவதாக கூறி அனுப்பி விட்டார்' என, கூறினார். இதற்கு, "சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டார். அப்போது அந்த அமைச்சர் எழுந்து, "என் வீட்டு பாத்ரூம் வரை கூட என் பின்னாலேயே கட்சியினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பலர் இருக்கும் போது, கட்சி விவகாரங்கள் குறித்து அந்த எம்.பி.,யுடன் பேச முடியாது என்பதால், அவரை தனியாக சந்திப்பதற்காக பிறகு பார்க்கலாம் என கூறினேன். என் மேல் தவறு இருந்தால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இனி இது போல் நடக்காது என உறுதியளிக்கிறேன்' என்றார். கூட்டத்தில் பேசிய ஒரு சில நிர்வாகிகள், "பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுக்குழுவில், சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய சேகர்பாபு எம்.எல்.ஏ.,விற்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அவர், "வடசென்னையில் கட்சியை எக்கு கோட்டையாக மாற்றுவேன்' என, உறுதியளித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shriram Selvam - chennai,இந்தியா
05-பிப்-201110:39:12 IST Report Abuse
Shriram Selvam mr.kumjumani.உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். வன்னியர்களின் வரலாறு தெரியாமல் கண்டபடி பேசும் நபர்களுக்கு தகுந்த பதில் கொடுப்பதை வரவேற்கிறேன் .தி.மு.க.உடன் அணி சேர்வது குறித்து மருத்துவர் அய்யா அவர்களும் சின்னையா அவர்களும் ஒன்றுக்கு நூறு முறை ஆலோசனை செய்து பார்க்கவும்.
Rate this:
Cancel
s.k - villupuram,இந்தியா
04-பிப்-201116:10:40 IST Report Abuse
s.k விளையாட்டில் ஊழல் செய்தவர்களைக் காட்டிலும் எங்கள் தலைவர் ஊழல்களில் விளையாடி சாதனை பல கண்டவர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
Rate this:
Cancel
Parthi Ban - Tiruppur,இந்தியா
04-பிப்-201115:47:32 IST Report Abuse
Parthi Ban முடியல............... இப்பவே............... கண்ணைக்கட்டுதே........................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X