தமிழ்நாடு

புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு

Added : பிப் 07, 2011
Advertisement

திருப்பூர்:திருப்பூர் அருகே பிச்சம்பாளையம்புதூரில் புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது; போலீசார் சமரசம் செய்தனர். திருப்பூர், பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர், கிழக்கு ஸ்ரீநகர் பகுதியில் குடியிருப்பையொட்டி ரோட்டோரத்தில் 15 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டுள்ளது. சர்ச்க்கு பின்னால் 2 சென்ட் காலி இடம் உள்ளது. காலி இடத்தில் சர்ச்சை விரிவுபடுத்த கிறிஸ்தவ அமைப்பினர் பலமுறை முயற்சி செய்துள்ளனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தில் ரேஷன் கடை, நூலகம், புறகாவல் நிலையம் என பொது காரியத்துக்கு பயன்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை கிறிஸ்தவ அமைப்பினர் 200 பேர் திடீரென சிமென்ட், கம்பி, கருங்கல் கொண்டு வந்து சர்ச் கட்ட முற்பட்டனர். தகவல் அறிந்ததும் இந்து அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் கூடி, சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. எஸ்.பி.அருண், டி.எஸ்.பி.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். காலி இடத்தில் எந்த கட்டடமும் கட்டக்கூடாது; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். பிரச்னை ஏற்படாமல் இருக்க 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X