பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ. 200 கோடி "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா? "டிவி' நிறுவனம் மறுப்பு

Updated : பிப் 13, 2011 | Added : பிப் 11, 2011 | கருத்துகள் (110)
Share
Advertisement

சென்னை : "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் தொலைத் தொடர்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, "கலைஞர் டிவி' 200 கோடி ரூபாய் பெற்ற விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதற்காக ராஜாவுக்கு வழங்கப்பட்ட லஞ்சப்பணம் தான் இது. இந்த பணம் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "எகனாமிக் டைம்ஸ்' மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற ஆங்கில நாளிதழ்களும், என்.டி.டி.வி., - டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில, "டிவி' சேனல்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.


சி.பி.ஐ., வலையில், "கலைஞர் டிவி': அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை தாக்கல் செய்த, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜாவும், முன்னாள் தொலைத் தொடர்பு அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டைப் பெற்ற, "ஸ்வான்' நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கடந்த, 8ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது நிறுவனம், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை, 1,537 கோடி ரூபாய்க்கு பெற்ற சில மாதங்களிலேயே, தனது 45 சதவீத பங்கை, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான, "எடிசலாட்' நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த விவகாரத்தில், "ஸ்வான்' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் ராஜா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. "ஸ்வான்' நிர்வாகி ஷாகித், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான, "கலைஞர் டிவி'யில், 214 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., நேற்று தெரிவித்தது. பல்வாவுக்கு சொந்தமான, "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பல்வாவின் உறவினர்கள் இயக்குனர்களாக உள்ள, "டி.பி.குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு, "கலைஞர் டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ., தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.


ஷாகித் உஸ்மான் பல்வா வளர்ந்த பாதை: "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் சிக்கியுள்ள மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, 37 வயதிலேயே பெரும் பணக்காரராக உருவெடுத்தவர். இவரது பூர்வீகம் குஜராத். பட்டப்படிப்பை முடிக்காதவர். நாட்டின் இளம் கோடீஸ்வரர் என்ற பாராட்டைப் பெற்றவர். இவரது தந்தை உஸ்மான் மும்பையில் ஓட்டல், ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். நிர்வாக பொறுப்பை ஷாகித் ஏற்றதும், தொழில் சூடுபிடித்தது. ஷாகித்தின் குடும்பம் மிகப் பெரும் பணக்கார குடும்பமாக வளர்ச்சியடைந்தது. கடந்த 2008ல், விவேக் கோயங்காவுடன் சேர்ந்து, டி.பி.ரியாலிடீஸ் நிறுவனத்தை தொடங்கினார். மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இந்நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. மும்பை சாகர் சாலையில், "கிறிஸ்டல் மால், மெரிடியன் ஓட்டல்' ஆகியவற்றை துவங்கினார். இதன் பின், புதியதாக கிடைத்த நண்பர்களால், தொலைத் தொடர்புத் துறையின் மீது, ஷாகித்தின் கண் பதிந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த, "எடிசலாட்' நிறுவனத்தின் பங்குதாரராக பல்வா சேர்ந்தார்; பின், துணைத் தலைவர் ஆனார். அடுத்து, "ஸ்வான்' நிறுவனத்தின் நிர்வாகியானார்.


மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் இருந்து, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை தனது, "ஸ்வான்' நிறுவனத்திற்கு ஷாகித் பெற்றார். அவருக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட, 13 வட்டாரங்களுக்கான, "ஸ்பெக்ட்ரம்' சேவை வழங்க அனுமதி கிடைத்தது. ஆனால், சில மாதங்களிலேயே தன், 45 சதவீத பங்குகளை அதிக விலைக்கு, "எடிசலாட்' நிறுவனத்திற்கு ஷாகித் விற்று விட்டார். ஷாகித் உஸ்மான் பல்வா, மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் பிரதிநிதி என, மும்பை கட்டுமானத்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த விவகாரங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


"கலைஞர் டிவி' விளக்கம்: இது குறித்து, "கலைஞர் டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த 2007 -08ம் ஆண்டில், மத்திய தொலைத் தொடர்புத்துறையால் ஒதுக்கப்பட்ட, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டு, "கலைஞர் டிவி' மற்றும், "சினியுக்' நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. "கலைஞர் டிவி' நிறுவனத்திற்கு, கடந்த 2009ம் ஆண்டு, "சினியுக்' நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது. இரண்டு நிறுவனங்களுக்கும், பங்குகள் மதிப்பீட்டில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பெறப்பட்ட, 200 கோடி ரூபாயை கடனாக பாவித்து, மொத்த பணமும், "கலைஞர் டிவி' நிறுவனத்தால், திருப்பித் தரப்பட்டது. அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனை முழுவதும், வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும், சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrasekaran - chennai,இந்தியா
13-பிப்-201121:07:30 IST Report Abuse
chandrasekaran இவங்களுக்கு ஊழல் விஞ்சானி ன்னு பட்டமே கொடுக்கலாம் .
Rate this:
Cancel
B V Kanna - Pondy,இந்தியா
13-பிப்-201117:16:34 IST Report Abuse
B V Kanna முதல்வர் ஒரு மேடையில் பேசும் போது நான் ஏழைகளுக்காகவே பிறந்தேன், ஏழைகளுக்காகவே அரசியலுக்கு வந்தேன், ஏழைகளுக்காகவே ஆட்சி செய்கிறேன் என பலவற்றை கூறினார்... மேலே படித்ததை வைத்து பார்க்கும் போது அவர் மற்றும் அவரை சுற்றி உள்ள உறவினர்கள், கட்சியின் பெரும்புள்ளிகள் அடங்கிய பட்டியலில் ஏழைகளே இல்லாமல் இருப்பர்... அவரை ஐந்து முறை தேர்ந்தெடுத்த நாம்தான் ஏழைகளாகவே இருப்போம்!!! இவர் ஏன் இன்னும் கருப்பு பணத்தைப்பற்றி எதையும் பேசவில்லை என்பதை அனைவரும் சற்று யோசிக்க வேண்டும்... வாழ்க தமிழ்!! வளரட்டும் இந்தியா!!!
Rate this:
Cancel
Moorthyar - Roma,இத்தாலி
13-பிப்-201115:39:50 IST Report Abuse
Moorthyar இலங்கை தமிழ் மக்களுக்கு கருணாநிதி செய்த கொடுமைக்கு அறுவடை நேரமிது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X