பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

Added : பிப் 11, 2011 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்க வாய்ப்பு உள்ளது,'' என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.


சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடை பெற உள்ள தேர்தல் குறித்த, ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, நேற்று இரவு 7.30 மணிக்கு டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் சட்டசபை தேர்தலின் போதே, வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல், வேட்பாளர்கள், தேர்தல் வரவு, செலவு பரிவர்த்தனைக்காக வங்கிகளில், புதிதாக தனி கணக்கு துவங்க வேண்டும் என்ற திட்டமும் இத் தேர்தலில் கண்டிப்பாக செயல் படுத்தப்படும். தேர்தலின் போது, அனைத்து இடங்களிலும் துணை ராணுவ படையினரை மட்டுமே பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும். எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
12-பிப்-201114:15:20 IST Report Abuse
villupuram jeevithan அந்த இரசீதை அங்கேயே உள்ள பெட்டியில் போட்டு, மறு எண்ணிக்கையின் போது உபயோகித்துக் கொள்ளலாம்.
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
12-பிப்-201113:39:33 IST Report Abuse
Rangarajan Pg GOOD CONSTRUCTIVE IDEA . WE ARE EXPECTING MORE INNOVATIVE AND CONSTRUCTIVE IDEAS FROM THE ELECTION COMMISSION. THIS WILL MAKE MORE PUBLIC TO HAVE INTEREST IN VOTING. INCULCATE THE INTEREST IN GENERAL PUBLIC TO CAST THEIR VOTES. THANKS.
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
12-பிப்-201113:28:33 IST Report Abuse
Shankar நாங்கள் எல்லாம் கள்ள ஓட்டு போடுறவங்க. எங்களுக்கு எதுக்கு சார் இந்த ரசீது எல்லாம். வீண் முயற்சி உங்களுக்கு. காகித செலவு, மை செலவு, அச்சு இயந்திர செலவு எல்லாம் எதுக்கு? ஏற்கனவே நம்ம தலைவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஊழல்கள் எல்லாம் செஞ்சு ஒவ்வொருத்தன் தலையிலும் ஆயிரக்கனக்கா கடன் வச்சிருக்கானுங்க. இதுல இந்த செலவு வேறயா? ஏமாறுகிறவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்துறவன் இருந்துக்கிட்டு தான் இருப்பான். அதனால திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நீங்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100 கேமரா வைத்து கண்காணித்தாலும் கள்ள ஓட்டு விழப்போறது நிச்சயம் தான். அப்படியே கள்ள ஓட்டு விழலைன்னாலும் நம்ம மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அய்யா ஜெயிச்ச மாதிரி ஜெயிக்க வச்சிட போறாங்க. இதுக்கு எதுக்கு வீண் செலவு???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X