மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு எஸ்கலேட்டர்கள்கூடுதல் கோட்ட மேலாளர் தகவல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு எஸ்கலேட்டர்கள்கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்

Added : பிப் 13, 2011

தெற்கு ரயில்வேயில் கணிசமான வருவாய் ஈட்டுவதில் மதுரை கோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை,கோவைக்கு அடுத்தபடியாக மதுரை ரயில்வே ஸ்டேஷனக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 40 ஆயிரம்பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ரயில்வே ஸ்டேஷனில் பல வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. மெயின் நுழைவு வாயில் விரிவுப்படுத்தப்படுகிறது. பிளாட்பாரங்கள் அகலப்படுத்தப்படுவதுடன், எஸ்கலேட்டர் போன்ற நவீன வசதிகள் விரைவில் அமையவுள்ளன. இதுகுறித்து மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் டி.வெங்கடசுப்ரமணியன் அளித்த பேட்டிஸ்டேஷனில் வளர்ச்சி பணிகள் எந்தளவுக்கு நடக்கின்றன?கடந்த நிதியாண்டில் 15 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தன. இந்தாண்டு 15 கோடி ரூபாய் மதிப்பில் பல பணிகள் நடக்கின்றன. மெயின் நுழைவு வாயில் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. தற்போதுள்ள ஆர்.எம்.எஸ்., அலுவலகம், பார்சல் அலுவலகம் இடிக்கப்படும். அவை மெயின் கட்டடத்துடன் இணைக்கப்படும். பார்சல் அலுவலகம் கூட்ஸ் தெரு எதிரிலுள்ள நுழைவு வாயில் வழியாக செல்லும் வகையில் அங்கு மாற்றப்படும். முதல் பிளாட்பாரம் மேலும் அகலப்படுத்தப்படும். எட்டாவது பிளாட்பாரம் 24 கோச்சுகள் நிற்கும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.இப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஓராண்டுக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். இதன் பின், மதுரை முன்மாதிரி ஸ்டேஷனாக திகழும்.எஸ்கலேட்டர் வசதி செய்யப்படுமா?
தற்போதுள்ள புதிய நடைபாதை மேம்பாலத்தில் இருந்து ஸ்டேஷன் வெளிப்புறம், முதல் பிளாட்பாரம், இரண்டு மற்றும் மூன்றாவது பிளாட்பாரம் ஆகிய இடங்களில் தலா இரண்டு வீதம் ஆறு எஸ்கலேட்டர்கள் நான்கு கோடி ரூபாயில் அமைக்கப்படும். ஆறு மாதங்களில் இவை செயல்படும். அதற்கான பணிகள் நடக்கின்றன.வேறு புதிய வசதிகள் செய்யும் திட்டங்கள் உண்டா?மெயின் நுழைவு வாயில் முதல் மாடியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக வெளிநாட்டு கரன்சி பரிமாற்றும் மையம் விரைவில் செயல்படும். ஐ.ஆர்.சி.டி.சி., அதற்கான நடவடிக்கை எடுக்கிறது.தல்லாகுளம் முன்பதிவு மையத்தை வேறு கட்டத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதே?இதற்காக தல்லாகுளம் பகுதியில் வேறு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம். அவர்கள் இடம் ஒதுக்கி கொடுத்ததும், முன்பதிவு மையம் மாற்றப்படும்.கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் விரிவுப்படுத்தப்படுமா?கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனில் நடைபாதை மேம்பாலம், பிளாட்பாரம் விரிவுப்படுத்துதல் போன்ற பணிகள் நடக்கின்றன. அங்கு தற்போது பயணிகள் வர ரோடு வசதியில்லை. ரோடு மற்றும் தெரு விளக்குகள் வசதி செய்யவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.மின்மயமாக்கும் பணிகள் எப்போது முடியும்?திருச்சி-மதுரை மின்மயமாக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதற்காக மதுரை, எரியோடு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தாண்டுக்குள் மதுரை வரை மின்சார ரயில்கள் வர வாய்ப்புகள் உள்ளன. மதுரை- தூத்துக்குடி மின்மயமாக்குவதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளன.ரயில்களில் எலி, கரப்பான் பூச்சி தொந்தரவுள்ளதே?ரயில் பெட்டிகளை பராமரிக்கும் பணிகள் தற்போது வேறு ஒரு தனியார் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே முன்பிருந்த நிலை நிச்சயம் மாறும். கரப்பான், மூட்டை பூச்சிகளை ஒழிக்க நவீன மருந்து, தெளிப்பான்கள் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேட்டியளித்தார்.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X