லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சிகளுடன் கைது செய்யப்பட்ட பாக்., பாடகர் விடுதலை

Updated : பிப் 14, 2011 | Added : பிப் 14, 2011 | கருத்துகள் (9)
Share
Advertisement
Rahat Fateh Ali Khan detained at Delhi Airport over undeclared foreign currency, பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது   ; லட்சக்கணக்கில் வெளிநா

புதுடில்லி: லட்சக்கணக்கில் அமெரிக்க கரன்சி மற்றும் டிராப்டுகள் சகிதம் டில்லி விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரபல பாடகரை டில்லியில் வருமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பாடகர் விடுதலை செய்ய்ப்பட்டார்.


துபாய் செல்ல தனது இசைக்குழுவினருடன் பாகிஸ்தான் பாடகர் ராகத்பதக் அலிகான் டில்லி வந்து கொண்டிருந்தார். இவர் டில்லி வந்து சேர்ந்ததும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானநிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் இவரிடம் 1. லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணம் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் ) , மற்றும் செக்குகள், டிமாண்ட் டிராப்டுகள் இருந்தன.


கணக்கில் காட்டப்படாத இந்த பணம் விவரம் குறித்து பாடகர் முறையான தகவல் அளிக்கவில்லை. இதனையடுத்து பாடகரும் இவருடன் இருந்த உதவியாளர் மற்றும் மானேஜர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.


இவரை விடுவிக்க பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பாக்., மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர். இவரை மதிப்புடன் நடத்துவதோடு விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டது. இத்துடன் இந்த விவகாரத்தை உன்னிப்பாக பாகிஸ்தான் கவனித்து வருகிறது.


விடுதலை : இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் ராகத் பதக் அலிகான் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 2 பேரும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிப்ரவரி 17ம் தேதி ஆஜராக வேண்டும் என்று வருமான நுண்ணரிவு பிரிவு அதிகாரிகள் உ‌த்தரவிட்டுள்ளனர். அவர்கள் தங்களது பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும என்றும் உத்தரவிட்டுள்ளனர். இதனால் விடுவிக்கப்பட்ட ராகத் பதக் அலிகான் உட்பட 3 பேரும் இந்தியாவை விட்டு வெளியறே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே கைது செய்யப்பட வேண்டியவர்: பாடகர் ராகத்பதக் அலிகான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டில்லியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக பணம் பெற்று வராமல் ஏமாற்றி விட்டார்.


இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் அவர் பாகிஸ்தானில் இருந்து விட்டபடியால் அவரை கைது செய்யப்பட முடியவில்லை.


ராகத் பதக் இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் அவார்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
14-பிப்-201119:36:21 IST Report Abuse
RAMASWAMY S WHAT GOVERMENT DONE IS GOOD JOB. CONGRATULATIONS. GOVT SHOULD TAKE IMMEDIATE ACTION
Rate this:
Cancel
drsrinivasan45 - chennai,இந்தியா
14-பிப்-201116:29:58 IST Report Abuse
drsrinivasan45 Reality show மூலம் பிரபலமானவர் ..முறைப்படி அவருக்கு சேர வேண்டிய பணத்தை பாகிஸ்தான் பணம் மூலமாகவோ முறையான ஆவணத்துடன் கூடிய டாலராகவோ இந்த பாடகருக்கு கொடுத்திருக்கலாம் ..Artist என்கிற விதிமுறைப்படி சலுகை உண்டு ..தெரிந்தே அல். தெரியாமலோ நடந்திருக்கலாம் ..8000 டாலருக்கான வரிபணத்தை பிடித்து கொண்டு நாட்டுக்குள் அனுமதிக்கலாம்.
Rate this:
Cancel
seyed - nambuthaalai,இந்தியா
14-பிப்-201114:11:04 IST Report Abuse
seyed பாகிஸ்தான் இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்ற நாடு என்பதை இங்கே எப்படி நிரூபிக்கிறார்கள் பாருங்கள். பணம் பெருமளவில் மாட்டியவுடன் அமைச்சர் உடனடியாக தலையிட்டு சரி செய்கிறார். அங்கேயும் அரசியல் வாதிகள் நமக்கு போட்டியாக செயல் பட்டு பணத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்து நம்மிடம் மாட்டியுள்ளார்கள்.. நம் நாட்டு வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணமும் இதுபோல எங்காவது மாட்டியிருந்தால் நம்மிடமே திறும்பி வந்திருக்கும். நம் அரசியல்வாதிகள் பாகிஸ்தானைவிட புத்திசாலிகள் அதனால் வழியில் மாட்டாமல் பத்திரமாக சேர்த்துவிட்டார்கள். பாகிஸ்தானியர்கள் நம்மிடம் மாட்டிக்கொண்டார்கள்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394