பிஎச்.டி., மாணவர்களின் புகார் எதிரொலி: வருகிறது புதிய கட்டுப்பாடு

Added : பிப் 18, 2011 | கருத்துகள் (4) | |
Advertisement
பிஎச்.டி., ஆய்வை முடித்து பட்டம் பெறுவதற்கு, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக, கைடுகள் மீது, ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், இப்பிரச்னையை சமாளிக்க, சென்னை பல்கலை, புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.பிஎச்.டி., ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன்(கைடு) அந்த ஆய்வில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சியில்

பிஎச்.டி., ஆய்வை முடித்து பட்டம் பெறுவதற்கு, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக, கைடுகள் மீது, ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், இப்பிரச்னையை சமாளிக்க, சென்னை பல்கலை, புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.பிஎச்.டி., ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன்(கைடு) அந்த ஆய்வில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் பிஎச்.டி., மாணவர்களுக்கு, கைடுகள் மூலம், பல பிரச்னைகள் இருப்பதாக, புகார் இருந்து வருகிறது.


ஆராய்ச்சியை முடித்து தருவதற்காக, மாணவர்களிடம் கைடுகள் பல லட்சம் பணம் கேட்பதாகவும், பலர், தங்க நகைகளை வாங்கித் தருமாறு வற்புறுத்துவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அவ்வாறு செய்யத் தவறும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சியை முடிக்கவிடாமல், கைடுகள், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக புகார் உள்ளது. மேலும், ஆராய்ச்சி மாணவர்கள், கைடுகளின் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, "பிஎச்.டி., மாணவர்கள் இன்னும் குரு குல முறையில் தான் படிக்கின்றனர்' என்றார்.


இப்பிரச்னை தொடர்பாக சென்னை பல்கலைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கைடுகளால் பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.பிஎச்.டி., மாணவர்கள் ஆய்வறிக்கையை முடித்தாலும், கைடுகள் அந்த ஆய்வறிக்கையை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்கள் பட்டியலை தருவதில்லை என்ற புகார் உள்ளது.பிஎச்.டி., ஆய்வறிக்கையை, வெளிநாட்டு தேர்வாளர்கள், பிற பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய தேர்வாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். இதன்பிறகு, நேர்முகத் தேர்வு (வைவா வோசி) நடைபெறும்.


ஆய்வறிக்கையை இறுதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன், "சினாப்சிஸ்' சமர்ப்பிக்கப்படும்போதோ, கைடு, வெளிநாட்டு தேர்வாளர், பிற பல்கலையைச் சேர்ந்த இந்திய தேர்வாளர் மற்றும் "வைவா வோசி' தேர்வாளர் பட்டியலை வழங்க வேண்டும் என, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.பிஎச்.டி., மாணவர்களுக்கு, "கன்சாலிடேட்டட் மார்க்' வழங்குவதற்கும் கைடுகள் தேவையற்ற காலதாமதம் செய்வதாக புகார் உள்ளது. இதை தவிர்க்க, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சம்பந்தப்பட்ட வழிகாட்டியை(கைடு) தன் அறைக்கு அழைத்து, "கன்சாலிடேட்டட் மார்க்' வழங்குமாறு கூறுவார்.


அங்கு, உடனுக்குடன் கைடு இப்பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு அழைக்கும்போது கைடு வரத் தவறினால், அப்பணியை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியே மேற்கொள்வார்.
ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது வழிகாட்டியை மாற்ற விரும்பினால், தடையில்லாச் சான்று பெற வேண்டும். இத்தடையில்லா சான்றிதழை தராமல் கைடுகள் இழுத்தடிப்பதாக புகார் உள்ளது. இப்பிரச்னையை எதிர்கொள்ள ஒரு கமிட்டியை சென்னை பல்கலை உருவாக்கியுள்ளது. அதில், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, ஆராய்ச்சிப் பிரிவு, "டீன்' ஆகியோர் இடம்பெறுவர்.


இக்குழு, கைடு மற்றும் பிஎச்.டி., மாணவர் இருவரையும் அழைத்து பேசி, கைடு மாற்றுவதற்கு தடையில்லாச் சான்று வாங்கித் தருவர். இந்த கூட்டத்திற்கு கைடு, மாணவர் வராவிட்டால், குழு தானாகவே தடையில்லாச் சான்று வழங்கும்.மேலும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வறிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிய, "ஆன்-லைன்' டிராக்கிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் தாங்களாகவே தங்களது அறிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.இம்முடிவு சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


- சு.மன்னர்மன்னன் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilulavan - Chennai,இந்தியா
23-பிப்-201116:28:11 IST Report Abuse
Tamilulavan சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தி ஆய்வு மாணவர்களின் வாழ்க்கையை வீணடிக்கும் இந்த நாசக்கார சில பேராசிரியர்கள் என்றைக்கும் திருந்தவே மாட்டார்கள் !! ஏழு இன்டர்நேஷனல் பேப்பெர்ஸ் இருந்தும் 11 மாதங்கள் என்னை அலைகழித்து viva நடத்தாமல் என் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் (2 தடவை) மண்ணை அள்ளி போட்டு விட்டது பெருமைமிகு சென்னை பல்கலை கழகம். இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கையை என் மனமார வரவேற்கிறேன்.
Rate this:
Cancel
Vaazhkkaiyai Tholaiththavan - Chennai,இந்தியா
22-பிப்-201102:44:06 IST Report Abuse
Vaazhkkaiyai Tholaiththavan எப்பா... இப்போவாச்சும் இந்த பூனைக்கு மணிய கட்ட முயற்சி பண்ணுறதுக்கு ரொம்ப நன்றிங்க.... PhD University of Madars-la பண்ணி மனசால பாதிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி மாணவனின் ஆதங்கம் இது.... PhD Join பண்ணி 4 வருஷம் கழிச்சு synopsis கொடுத்து அதுக்கு அப்பறம் ஒரு வருஷம் கழிச்சு thesis கொடுத்து....10 மாசம் கழிச்சு இன்னும் examiner report வரலன்னு சொல்லி.... இன்னும் viva exam வைக்கலங்க.... the controller of examinations, university of madras, chepauk campus, chennai-5 என்ற விலாசத்திற்கு எழுதிய லெட்டர் இன்னும் 4 மாசமா வரலையாங்க... என்ன கொடும சார் இது.... இத்தனைக்கும் 8 international publications இருக்குங்க என்னோட PhD ஆராய்ச்சியுல....
Rate this:
Cancel
Vaazhkkaiyai Tholaiththavan - Chennai,இந்தியா
21-பிப்-201122:05:07 IST Report Abuse
Vaazhkkaiyai Tholaiththavan எப்பா... இப்போவாச்சும் இந்த பூனைக்கு மணிய கட்ட முயற்சி பண்ணுறதுக்கு ரொம்ப நன்றிங்க.... PhD University of Madars-la பண்ணி மனசால பாதிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி மாணவனின் ஆதங்கம் இது.... PhD Join பண்ணி 4 வருஷம் கழிச்சு synopsis கொடுத்து அதுக்கு அப்பறம் ஒரு வருஷம் கழிச்சு thesis கொடுத்து.... 6 மாசம் கழிச்சு இந்தியன் examiner report வந்து... அப்பொறம் 4 மாசம் கழிச்சு foreign examiner report email softcopy வந்து... அவரோட hardcopy (Postal) வரலன்னு சொல்லி.... இன்னும் viva exam வைக்கலங்க.... the controller of examinations, university of madras, chepauk campus, chennai-5 என்ற விலாசத்திற்கு எழுதிய லெட்டர் இன்னும் 3 மாசமா வரலையாங்க... foreign examiner அனுப்பிட்டேனு சொல்லுரராம். ஆனா இங்க லெட்டர் வரலையாம்.... எனா கொடும சார் இது.... இத்தனைக்கும் 8 international publications இருக்குங்க என்னோட PhD ஆராய்ச்சியுல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X