தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (68)
Advertisement
தினகரன்,Dinakaran,  தொப்பி, Hat, ஆர்கே நகர் தேர்தல்,Arke Nagar Election,  தேர்தல் ஆணையம், Election Commission,சுயேட்சை,  கொங்கு முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் ரமேஷ், kongu munnetra kalagam ramesh,எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு,elutchi thamilan munnetra kalaga kesavalu, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி , National People Party candidate Ravi,

சென்னை: ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


விண்ணப்பம்

ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆர்கே நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

தினகரனுக்கு குக்கர்


தொப்பி யாருக்கு?

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டனர். முடிவில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.


குக்கர் சின்னம்:

பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தினகரன் கேட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.


எதிரிகளுக்கு பிரஷர்:

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது: எந்த சின்னம் ஒதுக்கியிருந்தாலும் நான் போட்டியிட்டிருப்பேன். இறுதியாக தாய்மார்கள் விரும்பும் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
08-டிச-201711:16:52 IST Report Abuse
Jayvee பருப்பு வேகுமா
Rate this:
Share this comment
Cancel
chenthil kumar - Nagercoil,இந்தியா
08-டிச-201705:31:48 IST Report Abuse
chenthil kumar இது ஜெயிலில் சசிகலா ஸ்பெசல் சமையல் அறையில் பயன் படுத்திய குக்வெர் நினைவாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட சின்னம். வாக்காளர்கள் இதை நினைவில் கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08-டிச-201704:53:34 IST Report Abuse
Swaminathan Chandramouli பரவாயில்லை இனி ஆர்கே நகரவாசிகள் தினம் தினம் புது புது குக்கர்களில் விதம் விதமாக சமைத்து தம்பி தினகரனுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் சுட சுட அளிப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X